Tuesday, November 26, 2024

விண்வெளியில் பரீட்சைக் கூடம் - விமர்சனங்கள்

 

நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்... அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது... அது ஒரு வித்தியாசமான அழைப்பு... அந்த தேர்வு இம்முறை விண்வெளியில் என்கிறது அந்த அழைப்பு! ... ஒரு விண்கலத்தில் அமர்ந்து அந்த தேர்வை எழுதி வர வேண்டும்... போவீர்களா, மாட்டீர்களா?

விண்வெளியில் பறக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவவிடுவோமா? அதுவும் இலவசமாக கிடைப்பது என்றால்...?
நீங்கள் நழுவவிட்டாலும் உங்களைப் படைத்தவன் விடுவதாக இல்லை. ஆம்... உங்களைப் படைத்த பின் உங்களை ஒரு விண்கலத்தின் மீது தான் விட்டுள்ளான். ஆம் அதுவே பூமி என்ற பிரமாண்டமான விண்கலம்!
ஆம் அன்பர்களே, நம்மில் பலரும் வாழ்க்கைக்காக உழைப்பதிலும் உழைத்து சம்பாதித்ததை செலவு செய்வதிலும் ரொம்பவும் பிசியாக இருப்பதால் இந்த உண்மைகளின் பக்கம் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்...
உங்கள் முகவரி என்ன என்று கேட்டால், கதவு எண், தெருப்பெயர், ஊர், மாவட்டம், மாநிலம், நாடு இவற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் அதற்கப்பாலும் உள்ள முகவரியை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா?
வாருங்கள்.... அவற்றைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம்...
https://www.quranmalar.com/2014/03/blog-post_26.html
===================
மேற்படி பதிவின் விமர்சனங்களில் பங்கேற்ற நாத்திகர்களுக்கு நான் முன்வைத்த கேள்வி இது... இதுவரை யாரும் பதில் கூற மறுக்கிறார்கள்... கொஞ்சம் ஏன்னு கேட்டு சொல்கிறீர்களா?
இங்கு காணும் ஒவ்வொரு பொருளுக்கும் (product) பின்னால் அது உண்டாக்கப்பட்டதன் ஒரு நோக்கம் இருப்பதை நமக்கு பகுத்தறிவு உணர்த்துகிறது. அவ்வாறு பார்க்கும் போது இருப்பதிலேயே மிக நுணுக்கம் வாய்ந்த மனிதன் என்ற (most complicated product) பொருளுக்கும் பின்னால் ஒரு முக்கிய நோக்கம் இருக்கவேண்டும் என்று பகுத்தறிவு உணர்த்துகிறது. இப்போது உங்களுக்கான கேள்வி .....உங்களைப் பொறுத்தவரை மனிதனுக்குப் பின்னால் நோக்கம் என்ன? எந்த நோக்கமும் இல்லை என்று சொல்வீர்களானால் அதற்கு என்ன அடிப்படை? (சுற்றி வளைக்காமலும் நேரடியாகவும் பதில் கூறவும்)
ரம்யா ராஜகுமார் 
Follow
Ithellam quranla entha page la irukku,...
3
Mohamed Kasim
Author
Admin
லிங்கை க்ளிக் செய்து படியுங்கள் ராஜ். அங்கு குர்ஆன் வசனங்கள் எவை என்பது புரியும்.
Michael Arts Charles
இன்னொரு அம்புலிமாமா கதையா அறிவியலையே மாவாக்கி வடை சுடுகிறார்கள்
4
Mohamed Farook 
Follow
///நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்... அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது... /// நாம் தேர்வு எழுதும்போது நாம் வேலைக்காக விண்ணப்பித்ததற்காகத்தான் இந்த தேர்வு என்று ஞாபகம் இருக்க வேண்டும். ஆனால் நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்று நமக்கே தெரியாது. எதற்காக தேர்வு என்றே தெரியாமல் எவனாவது தேர்வு எழுதுவானா?
2
Noor Mohammed
Admin
//அதற்கப்பாலும் உள்ள முகவரியை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா? // அருமையான வரிகள் very nice
Noor Mohammed
Admin
// Michael Arts Charles இன்னொரு அம்புலிமாமா கதையா அறிவியலையே மாவாக்கி வடை சுடுகிறார்கள் // அந்த மாவு எல்லோருக்கும் பொதுவானது யாரும் தோசையும் சுடலாம் பரோட்டாவும் போடாலாம் ....நாத்திகர்கள் போல மாவெல்லாம் எங்களுக்கே சொந்தம் என்று தலையில்தான் கொட்டிகொள்ளகூடாது .
Mohamed Farook 
Follow
///அதற்கப்பாலும் உள்ள முகவரியை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா?/// அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாமல் எந்த இறைவனாலும் பூமியின் முகவரியை தெரிந்து கொள்ள முடியாது.
Mohamed Kasim
Author
Admin
முஹம்மது பாரூக்
இது பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உண்மைகளை உணர்வோருக்கான போஸ்ட். எனினும் இதில் நீங்கள் பங்கேற்ப்பதால் முதலில் உங்கள் நிலையை தெளிவு படுத்துங்கள்... இங்கு காணும் ஒவ்வொரு பொருளுக்கும் (product) பின்னால் அது உண்டாக்கப்பட்டதன் ஒரு நோக்கம் இருப்பதை நமக்கு பகுத்தறிவு உணர்த்துகிறது. அவ்வாறு பார்க்கும் போது இருப்பதிலேயே மிக நுணுக்கம் வாய்ந்த மனிதன் என்ற (most complicated product) பொருளுக்கும் பின்னால் ஒரு முக்கிய நோக்கம் இருக்கவேண்டும் என்று பகுத்தறிவு உணர்த்துகிறது. இப்போது உங்களுக்கான கேள்வி .....உங்களைப் பொறுத்தவரை மனிதனுக்குப் பின்னால் நோக்கம் என்ன? எந்த நோக்கமும் இல்லை என்று சொல்வீர்களானால் அதற்கு என்ன அடிப்படை? (சுற்றி வளைக்காமலும் நேரடியாகவும் பதில் கூறவும்)
2
Mohamed Kasim
Author
Admin
Mohamed Michael Arts Charles please help Mohamed Farook to attend my question please!
வேலுபிள்ளை வேல்முருகன்
மனிதனுக்கு இறைவனின் தேவையென்ன?
Mohamed Kasim
Author
Admin
//உங்களுக்கான கேள்வி .....உங்களைப் பொறுத்தவரை மனிதனுக்குப் பின்னால் நோக்கம் என்ன? எந்த நோக்கமும் இல்லை என்று சொல்வீர்களானால் அதற்கு என்ன அடிப்படை? (சுற்றி வளைக்காமலும் நேரடியாகவும் பதில் கூறவும்)///
வேலுபிள்ளை வேல்முருகன்
மனிதனுக்கு பின்னால் நோக்கமென்ன?
............................... 
மனிதனுக்குப்பின்னாலுள்ள நோக்கம் என்ன?
இது என்னுடைய கேள்வி
Mohamed Kasim
Author
Admin
அய்யா, ஒரே இடத்தில் விவாதத்தை வைத்துக் கொள்வோம். புதிய பதிவிற்கு வந்து பின்னூட்டம் இடுங்கள்

No comments:

Post a Comment