நாத்திகம் என்றாலே தான்தோன்றித்தனம்! தன் செய்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான எந்த காரணியும் அங்கு இல்லை! ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதற்கும் எந்த உந்துதலும் இல்லை! நாத்திகத்தையும் போதித்துவிட்டு பதவி ஆசையும் வரக்கூடாதாம்...! சுயநலமும் இருக்கக் கூடாதாம்...! நாட்டுப்பற்றும் மனிதநேயமும் மிளிரவேண்டுமாம்....! அன்று பெரியார் விதைத்த விதைகள் உருவாக்கிய திராவிட செம்மல்கள் இன்று நாட்டை பங்கு போடுவதைக் காண இன்று அவர் இல்லையே!
============
Kothergani Buhari உங்களை பார்த்து சிரிக்கவா இல்ல பரிதாப படாவானு தெரியல காசிம்.
பதிவ புரிஞ்சு போடுங்க. நீங்க உங்கள மட்டும் அவமானப் படுத்திக்கல, உங்கள சுற்றி இருப்பவங்களையும் சேர்த்து அசிங்கப்படுத்துறீங்க.
October 2 at 6:34pm · Like
Mohamed Kasim நீங்க சிரிக்கவும் வேண்டாம் பரிதாபப் பாடவும் வேண்டாம். ///நாத்திகம் என்றாலே தான்தோன்றித்தனம்! தன் செய்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான எந்த காரணியும் அங்கு இல்லை! ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதற்கும் எந்த உந்துதலும் இல்லை!/// இதில் எதை மறுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா?
October 2 at 9:08pm · Like · 1
Royalbhai Salem உண்மை
October 2 at 11:12pm · Like
Mohamed Kasim Kothergani Buhari என் கேaaள்விக்கு பதில் இல்லாவிட்டால் ///பதிவ புரிஞ்சு போடுங்க. //// நீங்கள் புரிந்துகொண்டதையாவது கொஞ்சம் சொல்கிறீர்களா?
Yesterday at 8:23am · Like
Mohamed Farook ஏதோ நாத்திகம் என்றாலே பெரியாரும், அவரை பின் பற்றுபவர்களும்தான் என்கிற நினைப்பே தவறு. நான் பகுத்தறிவாதிதான். ஆனால் இதுவரை பெரியாரை படித்ததில்லை. அவரைப் பற்றிய எந்த பதிவும் போட்டதில்லை. நாத்திகவாதிகள் மட்டும்தான் பதவிகளுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்களா? எல்லாரும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அது மனிதனின் பேராசை.
12 hrs · Like · 1
Mohamed Kasim விவாத விஷயம் இது..////நாiத்திகம் என்றாலே தான்தோன்றித்தனம்! தன் செய்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான எந்த காரணியும் அங்கு இல்லை! ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதற்கும் எந்த உந்துதலும் இல்லை!//// இதைப் பற்றி கருத்துரை இடவும்.
மேற்கொண்டு பதில்கள் ஏதும் வராத காரணத்தால் நாத்திகம் பற்றிய என் கருத்து உண்மைதான் என்பது நாத்திகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்று கூறி இந்த பைலை குளோஸ் செய்துவிடலாமா யுவர் ஆனர்?
======================================
விமர்சனங்கள்
J Senthamizhan
உங்கள் பதிவிற்கு பதில் வராததறகு காரணம்...
நீங்கள் திமுக அதிமுக இத பத்தி பேசுறீங்கன்னு #பெரியாரிஸ்ட் நினைச்சிருப்பாங்க.....
பெரியாரிஸ்ட பத்தி பேசுறீங்கன்னு என்னை போன்ற #நாத்திகர்கள் நினைச்சுருபாங்க...
மூன்று தளத்தில் பதிவு போட்டா யாரு காரணி.... யாரு பொறுப்பேற்பாங்க...
புகாரி பாய் கருத்திடலன்னா நான் கூட லைக்போட்டுட்டு போயிருப்பேன்....
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
சரிண்ணே... விவாத விஷயத்துக்கு வருவோம்... ////நாiத்திகம் என்றாலே தான்தோன்றித்தனம்! தன் செய்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான எந்த காரணியும் அங்கு இல்லை! ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதற்கும் எந்த உந்துதலும் இல்லை!//// இதைப் பற்றி உங்க கருத்து சொல்லுங்களேன்....
- Like
- Share
2
J Senthamizhan
// சரிண்ணே... விவாத விஷயத்துக்கு வருவோம்... ////நாiத்திகம் என்றாலே தான்தோன்றித்தனம்! தன் செய்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான எந்த காரணியும் அங்கு இல்லை! ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதற்கும் எந்த உந்துதலும் இல்லை!//// இதைப் பற்றி உங்க கருத்து சொல்லுங்களேன்....
//இந்த அரிய கண்டுபிடிப்ப எப்ப கண்டு கண்டுபிடிச்சீங்க....
நான் ஒழுக்கங்கெட்டவன்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்....
- Like
- Share
2
D Prem Kumar
oru thavarai naathigan seidhu vittaal avan mannipu ketpadharku indha manidha samugathai vittaal veru vazhi illai.avanuku andha kutra unarchi irundhu kondey irukum.adutha murai adhai seiyya thayanguvaan.aanal oru aathigan thavaru seidhaal avanai mannipadharku karpanai kadavul irukiraan.avanadhu kutra unarchi ethnai murai thavru seidhaalum mannipadharkum avan kuttrathai solli pulambi than manadhai thetri kollvadharkum avanadhu karpanai kadavul irukiraan.aanal naadhigano indha manidha samudhaaithidam mattumey nambubavan.aagavey avan kutra unarachi avanai kutra seyalil irundhu thaduka seiyyum.
- Like
- Share
2
J Senthamizhan
நான் நாத்திகன் நான் ஊதாரியாக இருக்கிறேன்....
கற்பழிக்கிறேன்....
திருடுகிறேன்...
பொய் சொல்லுகிறேன்...
\\இப்படித்தான் காசிம் பாய் சொல்றாரு....
- Like
- Share
2
Mohamed Kasim
Author
Admin
மற்ற நாத்திகர்களை ஒப்பிடும்போது உங்கள் இருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது... விஷயத்தைப்பற்றி விவாதிக்கத் துணிந்தமைக்கு நன்றி. //இந்த அரிய கண்டுபிடிப்ப எப்ப கண்டு கண்டுபிடிச்சீங்க....
நான் ஒழுக்கங்கெட்டவன்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்..../// அண்ணே... இங்கே நாத்திகத்தின் இயல்பைத்தான் விவாதிக்கிறோமே தவிர தனி நபர்களை அல்ல. நாத்திகம் என்பது தான்தோன்றித்தனம் என்பதால் தனிநபர் ஒழுக்கத்தையோ கட்டுப்பாட்டையோ அங்கு நடைமுறைப்படுத்த முடியாது. தனிமனித சுயநலம் குறுக்கிடுவதால் ஒரு குழு அமைத்து கூட்டாக இயங்கவும் அங்கு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியாது.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
விவாதப் பொருளை புரிந்து கொள்வதற்காக - ஒரு ஒப்பீட்டுக்காக இதையும் உங்கள் முன் வைக்கிறேன்... இஸ்லாம் எப்படி தனி நபர் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் சமூக சீர்திருத்தங்களையும் நடைமுறை சாத்தியம் ஆக்குகிறது என்று பாருங்கள்....திருக்குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கும் கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் இம்முயற்சியில் வெற்றி காண முயல்வதை நீங்கள் காணலாம்
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)
- Like
- Share
கவுதமன் தி.வி.க
வணக்கம் நண்பா நாத்தீக இயல்பு சுயநலம் என்றீர்கள்,நீங்கள் நல்லது செய்பவர்கள் என்றால் அது எதற்காக.இறைவனால் நீங்கள் தன்டிக்கப்படகூடாது என்ற சுயநலத்தில்தானே.நாத்தீகன் சுயநலமற்றவன் மக்கள் நலத்தை மட்டும் விரும்புபவன்.1.அனைத்து மனிதர்களும் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றவில்லை.அது ஏன் இறைவனுக்கு பயப்பட வேண்டும் உண்மையாக இருந்தால் போதாதா?ஆத்மா என்றால் என்ன?உலகில் முதன் முதலில் தோன்றிய மனிதன் ஆண்அல்ல பெண்(உயிர் அறிவியல்) ஏன் கண்கானிக்க வேண்டும்?படைக்கும் போதே நல்லவனாய் படைத்திருந்தால் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லையே?
2.ஒருவனே இறைவன்,இதயே புத்தமும் சொல்கிறது.உருவ வழிபாட்டை எதிர்க்கிறது.வேறு கடவுளை(படைப்பினங்களை) படைத்த மனிதனை அல்லாஹ் கண்கனித்து கொண்டுதானே இருந்தார்(4:1) ஏன் தடுக்கவில்லை
3.அனைத்து பாவங்களையும் இங்கே செய்துவிட்டு பாவம் செய்தவனுக்கு அங்கே விசாரணை எதற்க்கு? அப்ப பாவத்தால் பாதிக்கப்பட்டவன் நிலை?
ஏன் அழிக்கப்படனும் மீண்டும் எழுப்பப்படனும்.இது தலையை சுற்றி மூக்கை தொடும் கதை அனைத்தையும் கண்கானிக்கும் சர்வசக்தி கொண்ட கடவுள் பாவத்தை ஒருவன் செய்யும் பொதே தடுத்திருந்தால் தேவையில்லாமல் உலகத்தை அழித்து மீன்டும் உயிர்கொடுக்கும் வேலை மிச்சம். இறைகட்டளைகளை கடவுள் ஏன் திருக்குரான் வடிவில் தந்தார் முதன் முதலில் மனிதனை படைக்கும் போதே பார்வை,கண் சிமிட்டுவது,இனப்பெருக்க உணர்வை போல மூளையில் இறைகட்டளைகளை பதிவு செய்திருக்கலாமே.சொர்கம் என்பது என்ன? மரணத்திற்க்கும் ஆத்மாவிற்க்கும் என்ன தொடர்பு? அறிவியல்படி ஆத்மா உண்டா?இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை கொடுக்கும் என்று இறைவனே தெரிந்திருக்கிறான்.
.
.
.
நீங்கள் கூறிய அனைத்துமே முரன்பாடானது.இப்படி பொய்யான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி நல்வழிபடுத்துவதைவிட,அனைவருக்கும் தரமான கல்வியை போதித்து நல்வழிபடுத்தலாமே
- Like
- Share
2
J Senthamizhan
விகிதாச்சார அடிப்படையில்....
இஸ்லாமியனுக்கு மட்டும் கடன் கொடுத்து...
இஸ்லாமியர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டி....
இஸ்லாமியர்களின் கடைகளில் மட்டும் பொருள் வாங்கும் இஸ்லாமியனை விட....
நாத்திகன் நல்லவனே....
- Like
- Share
2
கவுதமன் தி.வி.க
என் இஸ்லாமிய நன்பன் தன் இரு சக்கர வாகனத்தை காரில் மோதிவிட்டான் அந்த கார் ஓனர் முஸ்லீம்.அவர் சொன்னது"நீ முஸ்லீம்கரதால விடரேன் இனி வேகமா ஓட்டாத)
- Like
- Share
Anwar Arasai
விகிதாச்சார அடிப்படையில்....
இஸ்லாமியனுக்கு மட்டும் கடன் கொடுத்து...
இஸ்லாமியர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டி....
இஸ்லாமியர்களின் கடைகளில் மட்டும் பொருள் வாங்கும் இஸ்லாமியனை விட....
நாத்திகன் நல்லவனே....//// கொண்டை நல்லாவே வெளியே தெரிகிறது..... உண்மையை சொல்லுங்களேன்ய்யா.... (நாத்திக போர்வையில் காவிகள் )
- Like
- Share
2
Mohamed Kasim
Author
Admin
Uyir Neyam & J Jai Mani விவாத விஷயத்தை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற நோக்கில்தான் இங்கு இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஒப்பிடுவதற்காக குறிப்பிட்டேன். (இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு சென்றோமானால் விவாதம் திசை திரும்பிவிடும், அவற்றை வேறு இழையில் வாய்ப்பு வரும்போது விவாதிப்போம் இன்ஷாஅல்லாஹ்) இப்போது நான் உங்களிடம் கேட்பது நாத்திகர்களுக்கு இஸ்லாத்தில் உள்ளதுபோல கொள்கையோ , தனி நபர்களைக் கட்டுப்படுத்தும் விஷயங்களோ, குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட அடிப்படைகளோ உள்ளதா என்பதுதான்.எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை என்பதால்தான் 'தான்தோன்றித்தனம்' என்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்...
- Like
- Share
கவுதமன் தி.வி.க
யாரை சொன்னீர்கள்?
- Like
- Share
கவுதமன் தி.வி.க
விகிதாச்சார அடிப்படையில்....
இஸ்லாமியனுக்கு மட்டும் கடன் கொடுத்து...
இஸ்லாமியர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டி....
இஸ்லாமியர்களின் கடைகளில் மட்டும் பொருள் வாங்கும் இஸ்லாமியனை விட....
நாத்திகன் நல்லவனே....//// கொண்டை நல்லாவே வெளியே தெரிகிறது..... உண்மையை சொல்லுங்களேன்ய்யா.... (நாத்திக போர்வையில் காவிகள் )// நன்றி நன்பா முடிந்தால் என்னை உங்கள் முக நூல் நன்பராக ஏற்று என் ஸ்டேட்டஸ்களை பாருங்கள் பார்த்த பின் என்ன பிளாக் செய்ய நினைத்தால் செய்துவிடுங்கள் ஆனால் அதுவரை என்னால் வாதத்தை தொடர முடியாது மண்ணிக்கவும்
- Like
- Share
J Senthamizhan
நாத்திகன்னாலே நல்லவன்தான்....
அடிமைத்தனத்தை....
முட்டாள்தனத்தை...
பழைமை வாதத்தை.....
எதிர்பவன் நாத்திகன்....
ஒருவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து....
மரியாதையுடனும்...
கண்ணியத்துடன் பதில் அளிப்பவன் நாத்திகன்....
என்னை காவி என்றீர்கள் !
நான் உங்களை () ஏதேனும் சொன்னேன் என்று சொல்லுங்கள் ....
தரம்தாழ்ந்த நாத்திகனை காட்டுங்கள்....
ஏன் பன்னி முட்டாள் சைத்தான் சைத்தானின் வாரிசுகள் குரங்கு பயல்கள்...
இப்படியெல்லாம் திட்டிய போதும் தனிமனித விமர்சனமோ ! மதவாதிகளை வேறு ஏதேனும் வார்த்தைகளை பயன்படுத்தினோமா ?
பதிவுகள் உங்களிடம்....
பாருங்கள் நாத்திகனின் கண்ணியத்தையும் தனி மனித ஒழுக்கத்தையும்.....
பல ஆண்டுகால மத பார்வையில் நாங்கள் பக்குவப்பட்டுவிட்டோம்....
நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள்....
- Like
- Share
2
கவுதமன் தி.வி.க
என் இஸ்லாமிய நன்பன் தன் இரு சக்கர வாகனத்தை காரில் மோதிவிட்டான் அந்த கார் ஓனர் முஸ்லீம்.அவர் சொன்னது"நீ முஸ்லீம்கரதால விடரேன் இனி வேகமா ஓட்டாத) /// கொண்டை நல்லாவே வெளியே தெரிகிறது..... உண்மையை சொல்லுங்களேன்ய்யா.... (நாத்திக போர்வையில் காவிகள் )அவர் ஈரோட்டில் மொபைல் கடை வைத்திருக்கிறார்.விபத்து நடந்து 3 வாரங்களே ஆகிரது
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... விவாதிப்பவர் எப்படிப்பட்டவர் என்பதை விட விவாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். நபர்களை விமர்சித்து விவாதத்தின் போக்கை மாற்றி விடாதீர்கள்.ப்ளீஸ். அன்பர்களே Uyir Neyam & J Jai Mani எனது கேள்விக்கு பதில் கூறுங்கள்
- Like
- Share
கவுதமன் தி.வி.க
நன்பா மீண்டும் கூறுகிறேன் என் முக நூல் பக்கத்தை பார்த்துவிட்டு இந்து மதத்தை பற்றிய என் கருத்து என்ன என்பதை தெரிந்துகொண்டு விவாதத்தை தொடரலாம் 2 நிமிடம் என் மீதான உங்கள் நம்பிக்கை உறுதிபட (இல்லையேல் கண்டிப்பாக விவாதத்தை நிறுத்திவிடுவோம் தோழர்.நான் இஸ்லாத்தின் ஒரு சில கருத்துக்களை தவிர மற்ற கருத்துக்களை மதிப்பவன்.என் கல்லூரி உயிர் நன்பன் ஒரு இஸ்லாமியர்.தங்களால் நான் இஸ்லாமிய(ர்களின்)த்தின் மீது வைத்துள்ள மதிப்பு குறைவதை நான் விரும்பவில்லை)
- Like
- Share
J Senthamizhan
தாரளாமாக கேளுங்கள்....
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
நண்பர் Uyir Neyam அவர்களின் கூற்றை ஆமோதிக்கிறேன். இஸ்லாமிய அன்பர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்... சக மனிதனை மனிதன் என்ற அடிப்படையில்தான் பார்க்க இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. இன, மொழி, நாடு, போன்ற வரம்புகளைக் கடந்து இஸ்லாம் வளர்வதற்குக் காரணம் அது கற்பிக்கும் மனிதநேயமே. இஸ்லாத்தை ஒருகாலத்தில் எதிர்த்தவர்கள்தான் இன்று அதன் காவலர்களாக இருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பேணுங்கள். உங்களது நடத்தை மற்றவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக மாற்ற வேண்டாம். இதில் கவனமாக இருங்கள்.
- Like
- Share
Anwar Arasai
சகோ Uyir Neram..... தவறாக copy paste செய்துவிட்டேன்.... உங்களை சொல்லவில்லை நான்.... சில நபர்கள் நாத்திக போர்வையில் உலாவந்துகொண்டு இருக்கிறார்கள்...அவர்களுக்கு இஸ்லாத்தை மட்டும் எதிர்க்க வேண்டும்.... நான் சொல்வது சம்பந்தப்பட்டவர்க்கு புரியும்.... உங்களை சம்பந்தப்படுத்தி போட்ட காமெண்டை நீக்கிவிட்டேன்
- Like
- Share
2
J Senthamizhan
அன்சாரி ! அதுசரி !
அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சுஙகள் என குரான் சொல்கிறது....
அன்சாரி காவிகளை கண்டு அஞ்சுவார் போல....
யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும்....
அது காவியோ ! ஆவியோ !
உங்களுக்கு பதில் தெரியாமல் போனால் காவி பயங்கரவாதி !!!
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
சரி விடுங்கள் மணி சார்.... மீண்டும் நாம் பதிவு பற்றிய விவாதத்துக்கு வருவோம். நான் ஏற்கெனவே மேலே கேட்டுள்ள கேள்வியை இங்கு மீண்டும் பதிகிறேன்... Uyir Neyam & J Jai Mani விவாத விஷயத்தை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற நோக்கில்தான் இங்கு இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஒப்பிடுவதற்காக குறிப்பிட்டேன். (இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு சென்றோமானால் விவாதம் திசை திரும்பிவிடும், அவற்றை வேறு இழையில் வாய்ப்பு வரும்போது விவாதிப்போம் இன்ஷாஅல்லாஹ்) இப்போது நான் உங்களிடம் கேட்பது நாத்திகர்களுக்கு இஸ்லாத்தில் உள்ளதுபோல கொள்கையோ , தனி நபர்களைக் கட்டுப்படுத்தும் விஷயங்களோ, குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட அடிப்படைகளோ உள்ளதா என்பதுதான்.எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை என்பதால்தான் 'தான்தோன்றித்தனம்' என்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்...
- Like
- Share
J Senthamizhan
அப்படி எதுவும் நாத்திகத்தில் இல்லை சகோ......
நாங்கள் ஒன்றும் நேற்று பெரியாரை படித்துவிட்டு ! பெரியாரை மட்டும் படித்துவிட்டு நாத்திகத்திற்கு வரவில்லை !
அறிவார்ந்த தேடல் சகோ நாத்திகம்......
- Like
- Share
- Edited
கவுதமன் தி.வி.க
உண்டு ஆனால் எழுதபடாத சட்டம்
1.சக மனித,உயிர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்பவன்
2.பகுத்தறிவுவாததத்திற்க்கு ஒவ்வாத கருத்துக்களை சமுதாயத்திலிருந்து அகற்ற வேண்டும்
3.பெண்களின் விடுதலையை போற்ற வேண்டும்
4.பேதங்களற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
5.சிறந்த அறிவியல் கல்வியை அணைவருக்கும் அளிக்க வேண்டும்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
ஆக, தான்தோன்றித்தனமே நாத்திகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதாவது ஒவ்வொரு மனிதரும் அவரவர் அறிவுக்கு எது நல்லதாகப் படுகிறதோ அல்லது சூழ்நிலைக்கு தகுந்தது என்று கருதுகிறாரோ அதையே சட்டமாக்குகிறார்கள். மனித மனமே நாத்திகத்தின் அடித்தளம். அதன் ஆற்றலும், திறமையும் வரம்புகளுக்கு உட்பட்டது. சூழலுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப மாறக்கூடியது. இட வரம்பு, இன வரம்பு, மொழி வரம்பு, காலவரம்பு போன்றவற்றால் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியது. சுயநலம், நிதானமின்மை, சோர்வு, அறிவீனம்,உறுதியின்மை போன்ற எண்ணற்ற பலவீனங்கள் அங்கு ஆட்சி செலுத்துகின்றன. அதனால்தான் நாத்திகத்தால் அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து காலத்துக்கும், இடத்துக்கும் இனத்தினருக்கும் மொழியினருக்கும் ஏற்புடைய உலகளாவிய ஒரு சித்தாந்தத்தை/ கொள்கையை உருவாக்க முடிவதில்லை. மட்டுமல்ல, அதனால் எந்த ஒரு சமூக சீர்திருத்தத்தையும் நிகழ்த்த முடிவதும் இல்லை.
- Like
- Share
கவுதமன் தி.வி.க
அதை தான்தோன்றி என சொல்லக்கூடாது அறிவை பயன்படுத்தி நல்லதை தேர்ந்தெடுப்பது.நாத்தீகத்தை மதவாதிகளுக்கு புரிய வைப்பது கடினம்.ஏன் என்றால் பிறந்ததிலிருந்து இல்லாத ஒன்றை நம்பி மூளைக்கு பூட்டு போட்டுக்கொண்டிருக்கின்றனர்.தந்தை பெரியார்,அம்பேத்கார்,புத்தர்,லெனின்.பிடல் காஸ்ட்ரோ என சாதித்தவர்கள் ஏராளம் நண்பா.நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரிந்துகொள்ளலாமா?
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
///அதை தான்தோன்றி என சொல்லக்கூடாது அறிவை பயன்படுத்தி நல்லதை தேர்ந்தெடுப்பது/// நண்பரே.... இதைத்தான் விளக்கிக் கொண்டு வருகிறேன். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றியதை (அது நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம்) தேர்ந்தெடுத்து பின்பற்றுவதை வேறு எந்த வார்த்தையால் அழைப்பது? (மீதி விளக்கம் தொடரும் இன்ஷாஅல்லாஹ் )
- Like
- Share
கவுதமன் தி.வி.க
நீங்கள் சொல்ல வருவதை புரிந்துகொண்டேன்,ஆனால் தான் செய்யும் செயல் பிறரை வருத்துமா என்றும் சேர்த்து பார்க்க வேண்டும்.இதுவரை கடும் சொற்களை நான் பயன்படுத்தியதில்லை
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
அண்ணே 'தான்தோன்றித்தனம் என்ற வார்த்தை ஒரு இயல்பைத்தான் பிரதிபலிக்கிறதே தவிர அது யாரையும் புண்படுத்தும் ஒன்றல்ல, அந்த நோக்கத்தில் நாம் அதை பிரயோகிக்கவும் இல்லை. வேறு வார்த்தை இருந்தால் சொல்லுங்கள் அதை பயன்படுத்துவோம்... நான் இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டுக் கொண்டது போல மீண்டும் உங்களுக்கும் நினைவு படுத்துவது என்னவென்றால் இங்கு கருத்துக்களை மட்டும் மனம்திறந்து விவாதிப்போம், நபர்களை விமர்சிப்பதோ அல்லது புண்படுத்துவதோ நமது நோக்கமல்ல. நீங்கள் மேலே குறிப்பிட்ட பெருந்தகைகளையும் நாம் விமர்சிக்கவில்லை. என் பதிவில் பெரியாரை குறைகூறவில்லை ஆனால் அவர் கைகொண்ட நாத்திகம் என்ற கருவியின் பலவீனத்தைத் தான் விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்கவும்.
- Like
- Share
கவுதமன் தி.வி.க
வணக்கம் நண்பா நாத்தீக இயல்பு சுயநலம் என்றீர்கள்,நீங்கள் நல்லது செய்பவர்கள் என்றால் அது எதற்காக.இறைவனால் நீங்கள் தன்டிக்கப்படகூடாது என்ற சுயநலத்தில்தானே.நாத்தீகன் சுயநலமற்றவன் மக்கள் நலத்தை மட்டும் விரும்புபவன்.1.அனைத்து மனிதர்களும் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றவில்லை.அது ஏன் இறைவனுக்கு பயப்பட வேண்டும் உண்மையாக இருந்தால் போதாதா?ஆத்மா என்றால் என்ன?உலகில் முதன் முதலில் தோன்றிய மனிதன் ஆண்அல்ல பெண்(உயிர் அறிவியல்) ஏன் கண்கானிக்க வேண்டும்?படைக்கும் போதே நல்லவனாய் படைத்திருந்தால் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லையே?
2.ஒருவனே இறைவன்,இதயே புத்தமும் சொல்கிறது.உருவ வழிபாட்டை எதிர்க்கிறது.வேறு கடவுளை(படைப்பினங்களை) படைத்த மனிதனை அல்லாஹ் கண்கனித்து கொண்டுதானே இருந்தார்(4:1) ஏன் தடுக்கவில்லை
3.அனைத்து பாவங்களையும் இங்கே செய்துவிட்டு பாவம் செய்தவனுக்கு அங்கே விசாரணை எதற்க்கு? அப்ப பாவத்தால் பாதிக்கப்பட்டவன் நிலை?
ஏன் அழிக்கப்படனும் மீண்டும் எழுப்பப்படனும்.இது தலையை சுற்றி மூக்கை தொடும் கதை அனைத்தையும் கண்கானிக்கும் சர்வசக்தி கொண்ட கடவுள் பாவத்தை ஒருவன் செய்யும் பொதே தடுத்திருந்தால் தேவையில்லாமல் உலகத்தை அழித்து மீன்டும் உயிர்கொடுக்கும் வேலை மிச்சம். இறைகட்டளைகளை கடவுள் ஏன் திருக்குரான் வடிவில் தந்தார் முதன் முதலில் மனிதனை படைக்கும் போதே பார்வை,கண் சிமிட்டுவது,இனப்பெருக்க உணர்வை போல மூளையில் இறைகட்டளைகளை பதிவு செய்திருக்கலாமே.சொர்கம் என்பது என்ன? மரணத்திற்க்கும் ஆத்மாவிற்க்கும் என்ன தொடர்பு? அறிவியல்படி ஆத்மா உண்டா?இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை கொடுக்கும் என்று இறைவனே தெரிந்திருக்கிறான்.
.
.
.
நீங்கள் கூறிய அனைத்துமே முரன்பாடானது.இப்படி பொய்யான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி நல்வழிபடுத்துவதைவிட,அனைவருக்கும் தரமான கல்வியை போதித்து நல்வழிபடுத்தலாமே//இதற்க்கு பதில்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
அய்யா, அவசரப்படாமல் ஒவ்வொன்றாக விவாதிப்போம். ஒரு கருத்தை விவாதிக்கும்போது வேறு ஒன்றிற்கு தாவாமல் இருந்தால் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுகிறேன். ஒருவரை ஒருவர் வெல்வது நோக்கமல்ல. பரஸ்பரம் கற்றுக் கொண்டவைகளை பரிமாறக் கொள்கிறோம். அவ்வளவே. பல பார்வையாளர்களும் நமது விவாதத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்வோம். முதலில் என்னைப் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் அளித்துவிட்டு மீண்டும் தொடர்வோம். நான் எனது ப்ரோபைலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். நான் ஒரு என்ஜினியர், பெங்களூர் வாழ் தமிழன், HAL இல் வேலை பார்த்தவன், தற்போது ஒரு தமிழ் மாத இதழின் ஆசிரியர் மற்றும் சமூக சேவகன். என் பெயர் முஹம்மது காசிம் . உங்கள் பெயரையும் விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆசை.
- Like
- Share
கவுதமன் தி.வி.க
அண்ணா! நான் கௌதமன் mba படித்துக்கொண்டிருக்கிறேன்.அன்றாடம் சமுதாயத்தில் நடக்கும் இழிவுகள்.இந்த உலகத்தில் வாழும் மனிதன் தன் சக மனிதனை வெறுக்க காரணம் என்ன என்பதை அழ்ந்து சிந்தித்து எனக்குள்ளே ஓர் முடிவுக்கு வந்துள்ளேன்.அதன்படி வேறுபாடுகளை களைய போராடிக்கொண்டிருக்கிறேன்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Arumai thozhar. Indru bakrid. Virivaaga piragu padhividukiren. We are with you to bring any positive social revolution.
No comments:
Post a Comment