Sunday, November 24, 2024

நன்மைக்காக சமூக வலைத்தளங்கள்

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

# மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள் ....  (திருக்குர்ஆன் 3:110)

# இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சமூக வலைத்தள அழைப்பியல் ppt யின் நோக்கம் பற்றி..

ஒருபுறம் உம்மத்திற்கு எதிரான சதித் திட்டங்களை அம்பலப்படுத்தவும் பொதுமக்களிடம் இஸ்லாமியர்களின் கண்ணியத்தைக் காக்கவும் உதவும் சமூக வலைத்தளங்கள் மறுபுறம் இஸ்லாத்தின் செய்திகள் பெருவாரியான மக்களை சென்றடைய உதவும் மாபெரும் அருட்கொடையாகவும் விளங்குகின்றன. இந்த அருட்கொடையை பயனுள்ள முறையில் கொண்டுசெல்ல உம்மத்தை ஒருங்கிணைப்பது என்பது மிகப்பெரிய பணி. இதற்கான ஒரு மிகச்சிறு முயற்சிதான் இங்கு நாம் மேற்கொண்டிருப்பது. அல்லாஹ் இப்பணியில் பர்கத் வழங்குவானாக என்றும் இப்பணியை ஒரு நல்ல அமலாக கபூல் செய்வானாக என்றும் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் இருந்தும் நம்மைக் காப்பானாக. ஆமீன்.

எங்களைப் பற்றிய அறிமுகம்:

நாங்கள் மாற்றுமத அன்பர்களிடையே பரவிக்கிடக்கும் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளைக் களையவும் அவர்களிடையே எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் அவர்களுக்கு உண்மையான இஸ்லாத்தை அறிமுகப்படுத்தவும் அவர்களின் இம்மை மற்றும் மறுமை வாழ்க்கை சிறக்கவும் வேண்டி தஃவா பணியை மேற்கொண்டிருப்பவர்கள்.

எங்கள் செயல்பாடுகள் சில:

- மாற்றுமத அன்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்தல்.

- நகரங்களிலும் சேரிகளிலும் சமூகப் பணி, மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல்.

- தவா ஸ்டால்கள் வழியாக தெரு தாவா

- தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் தஃவா இலக்கியம்

- திருக்குர்ஆன் குர்ஆன் வாசகர்களை பின்தொடர்தல் (follow-up)

- அவர்களுக்காக் திருக்குர்ஆன் வாசகர் வட்டம் சந்திப்பு

- அவர்களுக்காக திருக்குர்ஆன் நற்செய்தி மலர் என்ற மாத இதழ் நடத்துதல்.

- இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகப்படுத்தும் வீடியோக்கள் தயாரித்தல், தமிழாக்கம் செய்தல்...

- இஸ்லாத்தை ஏற்றவர்களின் விளக்கங்களை வீடியோ பதிவாக சமூக வளத் தளங்களில் அப்லோட் செய்தல்.

- மார்க்க அறிஞர்கள் மூலம் தவா பயிற்சி வகுப்புகள் நடத்துதல், ஏற்கெனவே பணிகளில் ஈடுபட்டுள்ள தாஇகளுக்கு இறையச்சப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

இன்னும் இவைபோன்றவை அல்லாஹ்வின் பொருத்தம் கருதி  நிறைவேற்றுதல்.

 

= கீழ்கண்ட தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இவற்றை சற்று நன்கு அறிந்து கொள்வது நாம் மேற்கொண்டிருக்கும் பணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்ஷாஅல்லாஹ்:

www.quranmalar.com

www.thiruquranmalar.com

எங்கள் அறிமுகத்திற்காக  எங்கள் வெளியீடுகள் சில

= மாற்றுமத அன்பர்களுக்காக நடத்தப்படும் மாத இதழ் திருக்குர்ஆன் நற்செய்தி மலர் 👇

= 👆 உதாரணத்துக்காக இவையெல்லாம் மாற்றுமத அன்பர்களுக்காக பிரிண்ட் செய்யப்பட்டு விநியோகிக்கப் படும் சிற்றேடுகள், குறுநூல்கள் போன்றவை

= சமூக வலைத்தளங்கள பயன்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில புள்ளி விவரங்கள்

அன்பான சகோதரர்களே

இது ஒரு பயிலுங்கள் மற்றும் பயின்றதைக் கற்றுக் கொடுங்கள் என்ற பாணியில் தொடர வேண்டிய ஒரு பணி. இங்கு சமூக வலைத் தள அனுபவத்தில் PHd களும் LKG நிலையில் உள்ளவர்களும் உள்ளார்கள் என்பதை அறிவோம். இங்கு நாங்கள் நடத்தக் கூடிய 'பாடங்கள்' கடைநிலையில் உள்ளவர்களைக் கருத்தில் கொண்டதாக இருக்கும். முதுநிலையில் உள்ளவர்கள் அல்லாஹ்வுக்காக பொறுமை காக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நமது இந்த பாடங்களின் நோக்கம் இந்த சமூக வலைத்தள விழிப்புணர்வு அனைத்து உம்மத்தின் இடையேயும் ஏற்பட வேண்டும் என்பதே. இங்கு நாங்கள் முன்வைக்கும் தொகுப்பை வைத்துக்கொண்டு நீங்களும் இதே பாடங்களை சங்கிலி தொடர்போல உங்கள் மற்ற சகோதரர்களுக்கும் கொண்டு செல்ல முடியும். இன்ஷாஅல்லாஹ். அவ்வாறு நீங்கள் செய்ய விரும்பினால், இங்கு நாங்கள் வழங்கும் செய்திகளை chat history யில் இருந்து நீங்கள் தொகுக்கலாம்.

= அவ்வாறு தொகுப்பவர்கள் இதை இன்னும் improve  செய்தும் பணியைத் தொடரலாம் இன்ஷாஅல்லாஹ்.

= தகவல் தொடர்பில் நாம் அடைந்துள்ள மாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம்.

= நம் உம்மத் அறிவார்ந்த சமூகம். அந்த வகையில் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கு கொண்டுவந்துள்ள இறை அருட்கொடையை நாம் அடையாளம் காண்பதில் பின்தங்கி விடக்கூடாது.

= ஒப்பீடு bw பழைய & புதியது

பத்திரிகை, ரேடியோ, டிவி மூலமாக தகவல் பரிமாற்றம் நடைபெற்றபோது...

- ஒரு வழி தொடர்பு..

- செய்திகளுக்கு பதிலளிக்க அல்லது எதிர்வினையாற்ற பொது மக்களுக்கு வழியில்லை.

- ஆட்சியாளர்கள் பொய்களை முதலீடாக வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றலாம், சுரண்டலாம்

- போர், கலகம்,  வன்முறை பற்றிய உண்மைகளை மறைத்து பொய் அறிக்கைகள் வெளியிட்டு மக்கள் அலையை தமக்கு சாதகமாக உருவாக்கலாம்.

- தடையில்லா தவறான பிரச்சாரம்

குறிப்பு:  இது உண்மையில் ஒரு பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் எடுக்க வேண்டிய வகுப்பு. தற்போது அதற்கு வழியில்லாததால் முடிந்தவரை சுருக்கமான முறையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சகோதரர்கள் இதை புரிந்து கொள்ளவும்.

ஆடியோக்கள் மூலம் கருத்துக்களை தெரிவித்தாலும் அவை பெரும்பாலும் மக்கள் டவுன்லோட் செய்து கேட்பது இல்லை. எனவே முடிந்தவரை டெக்ஸ்ட் மூலம் இங்கு பகிரப்படுகிறது.

இன்றும் கூட சமூக வலைத்தளம் பற்றிய போதிய விழிப்புணர்வு நம் உம்மத்திற்கு இல்லாத காரணத்தால் ஆட்சியாளர்கள் ஊடகங்கள் மூலம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பொதுமக்களை மூளை சலவை செய்து அவர்களை நமக்கு எதிராகத் திருப்பி விடுகிறார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும் அதன்மூலம் மக்கள் மனங்களில் வெறுப்பை விதைக்கவும் கலவரங்களை உருவாக்கவும் வாக்குவங்கிகளை வலுப்படுத்தவும் ஆட்சியைக்கைப்பற்றவும் செய்கிறார்கள். மறுபுறம் ஏகாதிபத்திய சக்திகள் உலக அளவில் நாடுகளுக்கு இடையே போர்களை மூட்டவும் அதன்மூலம் தங்கள்  ஆயுதங்களை விற்கவும் நாடுகளை - நாட்டுவளங்களை - கொள்ளை அடிக்கவும் செய்கிறார்கள்.

= சமூக வலைத்தளப் புரட்சி கொண்டுவந்துள்ள மாற்றங்கள்

இன்று சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பரவலாகி வருவதைத் தொடர்ந்து இந்த ஊடக ஆதிக்கத்தில் நம் எதிரிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாதாரண ஊடகங்களை விட சமூக ஊடகங்கள் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. தாக்கங்களையும் உண்டாக்குகின்றன. அதே நேரத்தில் அந்த செய்திகளுக்கான மறுப்புகளையும் உடனே வாசகர்கள் பதிவு செய்ய முடிகிறது. மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் ஒருங்கிணைக்கவும் போராடவும் முடிகிறது. அண்மையில் சென்னை மரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தைக் கூறலாம்.

இன்று மக்கள் அதிகமான மக்கள் செய்திகளை பெரும் தளம் ஆக பேஸ்புக் மாறி உள்ளது

வழக்கமான ஊடகங்களை விட சமூக வலைத்தளம் மூலமாகத்தான் மக்களுக்கு செய்திகள் சென்றடைகின்றன... அதிலும் பேஸ்புக் முன்னணியில் உள்ளது...

= பழைய மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களின் தாக்கத்தை ஒப்பிட்டு அறிந்து கொள்வதற்கான இன்னொரு உதாரணம்.

கோவையில் சிலவருடங்களுக்கு முன் அத்வானி வருகையைத் தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்பும் கலவரங்களும் உங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தின்போது முஸ்லிம்களின் கடைகளை வகுப்புவாத சக்திகள் சூறையாடிய போது முஸ்லிம்கள் செயலாற்றுப் போயிருந்தனர் என்பதை நாம் அறிவோம். யாருக்கும் உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது.

ஆனால் சமீபத்திய அதாவது ஜெயலலிதா மறைவுக்கு முன் கோவையில் நடந்த  கலவரத்தின்போது மக்கள் உடனுக்குடன் கலவர வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து முகநூல் மற்றும் வாட்சப்பில் பகிர்ந்துகொண்டனர். கடைகளில் பொருத்தப்பட்ட cctv கேமராக்களில் கலவரக்காரர்கள் மொபைல் போன் மற்றும் பொருட்களைத் திருடிச்செல்லும் காட்சிகளைப் பதிவு செய்து உடனுக்குடன் பகிர்ந்து நாடு முழுவதும் பரப்பினர். வகுப்புவாத சக்திகளின் சதித் திட்டங்கள் அம்பலமானது. வகுப்புவாத சக்திகளே கலவரத்திற்கான காரணம் என்பதை மக்கள் புரிய நேர்ந்தது. அதனால் எதிரிகளின் திட்டம் பிசுபிசுத்துப் போனது.

= சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்பட்டிருக்கும் இன்னொரு முக்கிய டெவலப்மெண்ட் என்னவென்றால் பழைய மாதிரி போர்களை நடத்த முடிவதில்லை.

முன்பெல்லாம் இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால்... உதாரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லையில் ஒரு அதிகாரி அல்லது ஸ்பொகேஸ்பர்சன் நின்று கொண்டு செல்வார்.. இத்தனை விமானங்களை அல்லது டாங்கிகளை நாங்கள் என்று அழித்தோம் இத்தனை எதிரி வீரர்களை கொன்றோம் என்று ஸ்டேட்மெண்ட் கொடுப்பார்கள். அதை பத்திரிகைகளும் டிவி ரேடியோ ஊடகங்களும் அப்படியே மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்..

எதிரி நாடும் அதேபோல சொல்லிக்கொள்ளும். உண்மை நிலவரம் சரியானபடி இரு நாட்டு மக்களுக்கும் கிடைக்காது..

 ஆனால் இன்று அப்படியல்ல இடையே உள்ள ஊடக சக்திகளும் மக்கள் சக்திகளும் வீடியோ எடுத்து உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி விடுகின்றன. உதாரணமாக புல்வாமா தாக்குதல் பற்றி இந்திய அரசு சொன்னது பொய்யென்று உடனடியாக பிபிசி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.. அரசியல் காரணத்துக்காகவே இந்தியா சொந்த நாட்டு ராணுவ வீரர்களை கொன்ற நிகழ்ச்சி நடைபெற்றது என்று மக்களுக்கு தெரியவந்தது..

= இரு நாடுகளுக்கிடையே போர் நடக்க வேண்டுமானால் இரு நாட்டு மக்களையும் கன்வின்ஸ் செய்தாக வேண்டும். ஏனெனில் மக்களின் வரிப்பணம் தான் போருக்கு உபயோகப்படுத்தப்படும். மட்டுமல்ல மக்கள்தான் போர் முனைக்கு செல்ல வேண்டும்.. அதற்கு எதிரி நாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்தவேண்டும் இந்த நடைமுறை காலகாலமாக இருந்து வந்த ஒன்று ஆனால் என்று சமூக வலைதள செயல்பாட்டின் மூலம் மக்கள் உண்மை தன்மையை எளிதில் தெரிந்து கொள்கிறார்கள்.. அவ்வளவு எளிதாக எதிரி நாட்டின் மீது வெறுப்பை விதைக்க முடிவதில்லை

--------------

சமூக வலைதள செயல்பாட்டில் நம் உம்மத்தின் முக்கியமான பின்னடைவுக்கு காரணங்கள் என்ன?

1. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் நமது உம்மத்தினர்கள் மற்ற எந்த சமூகத்தையும் விட சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இதன் மூலம் நாம் செய்யக்கூடிய செயல்பாடுகள் சாதனைகள் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு நமக்கு அறவே இல்லை.. எதிரிகளால் நாம் எவ்வாறு ஏமாற்றப் படுகிறோம் அல்லது சுரண்ட படுகிறோம், அவர்களின் சதிகள் என்னென்ன? என்பவை  பற்றி இன்னும் நமது உம்மத் உணரவில்லை..

2. உலமாக்கள் இன்னும் கூட சமூக வலைதளங்களை தீண்டத் தகாதவை என்று ஒதுக்கி வைப்பதும் ஒரு காரணமாகும்.

3. ஏற்கனவே வலைதளங்களில் பல்வேறு போராளிகள் அசத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கிடையே ஒரு முறையான ஒருங்கிணைப்பு என்பது நடைபெறவில்லை அதனால் நாம் ஒரு வலுவிழந்த படை போலவே இருந்து கொண்டிருக்கிறோம்.

4.CAA, NRC  போன்றவற்றில் நாம் ஒருங்கிணைந்து செயலாற்றியது போல சமூக வலைதள செயல்பாட்டில்  நமது இயக்கங்களும் கட்சிகளும் அக்கறை காட்டவில்லை.

இங்கே கூறப்படாத வேறு பல காரணங்களும் இருக்கலாம்

= என்னதான் நடக்கிறது சமூக வலைத்தளங்கள் மூலம்?

அன்பான சகோதரர்களே, சமூகவலைதளங்களில் என்ன நடக்கிறது ?

 இன்று விழித்துக் கொண்டிருக்க கூடிய 70 சதவீதம் கண்களும் செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றன. செய்தி விளையாட்டு கேளிக்கை பொழுதுபோக்கு ஆன்மீகம் அறிவியல் அரசியல் என அனைத்து தளங்களில் இருந்தும் அவர்களை தகவல்கள் வந்தடைந்து கொண்டிருக்கின்றன.

பயனுள்ள தகவல்கள் அந்த மனிதர்களுக்கு நன்மை பயப்பதாக ஆகின்றன பயனற்ற மட்டும் ஷைத்தானிய தகவல்கள் அவனுக்கு தீமையாக ஆகிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நமது கடமை என்ன?

= நம்மைப்பற்றி நம்மைப் படைத்தவன் என்ன கூறுகிறான்?   

    كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ … 

 

“(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்...... ” (திருக்குர்ஆன்  3:110)

= அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:2-3)

= சாதாரண மக்களைப் போல் அல்ல நமது நிலை என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த பூமியில் நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது உலக மக்களுக்கு நேர்வழி காட்ட வேண்டியது நமது பொறுப்பாகும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சுமத்தி சென்ற தாவா பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.  கண் முன்னே காணும் உலகிலும் சரி கண்முன்னே காணாத  சமூக வலைதளங்களிலும்சரி, நமது பணியை நிறைவேற்றியாகவேண்டும்.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.
அறிவிப்பவர் : அபு ஸயீதுல் குத்ரி (ரழி) முஸ்லிம், அபு தாவுத் (1140, 4340),

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ 

 (நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான். (திருக்குர்ஆன் 16:125)

= மேற்கண்டவை நாம் அறிந்த திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் தான். இவற்றை நாம் மீண்டும் நினைவில் இருத்தி கொள்ளுதல் வேண்டும்.  நமது பணி இன்றைய யுகத்தில் அந்த நபிமார்களின் பணியாக உள்ளது.

நமது செயல்பாடு முழுக்கமுழுக்க அல்லாஹ்வின் பொருத்தத்தை  தேடுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். நமது நியத்து களை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

= நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ”…என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை மக்களுக்கு எத்திவைத்து விடுங்கள்…”           (ஸஹீஹுல் புகாரி)

= அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.”    (ஸஹீஹுல் புகாரி)

= நமது சமூக வலைதள செயல்பாடு என்பது தூய்மையான நிய்யத்தோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. ஒரு தாஇக்கு இருக்கவேண்டிய அனைத்துப் பண்புகளும் நம்மில் இருக்க வேண்டும்.. தொழுகை திக்ருகள் பாவமன்னிப்பு திருக்குர்ஆன் வாசிப்பு போன்றவற்றோடு தஹஜ்ஜத் தொழுகையும் முக்கியமான ஒன்று இவையெல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுத்தரும் அப்பொழுது நமது செயல்பாடுகளும் வெற்றியோடு அமையும் இன்ஷா அல்லாஹ்.

= அதேபோல வெற்று முகநூல் வீரர்களாக ஆகிவிடாமல் களப்பணியில் நாம் முழுமையாக ஈடுபடவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.”    (ஸஹீஹ் முஸ்லிம்)

சமூக வலைத்தள உலகில் ஒரு முஸ்லிமின் கடமை

 இந்த குர்ஆன் வசனம் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று :

 

 ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்கு படுத்தியவன் மீதும் சத்தியமாக.. அப்பால் அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான்.  அந்த ஆத்மாவை பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றி அடைந்தார். ஆனால் எவன் அதை பாவத்தில் புகுத்தினானோ அவன் திட்டமாக தோல்வியடைந்தான். (குர்ஆன் 91:7-10)

சமூக வலைதளங்கள் வாயிலாக மனிதனுக்கு நல்லவையும் கெட்ட வையும் வந்து சேரும்..

பொய் வதந்தி தவறான செய்திகள் ஆபாசங்கள் போன்ற விஷயங்களைக் கொண்டு சைத்தான் மனிதனை வழிகெடுத்து  நரகத்திற்கு கொண்டு செல்ல முயலுவான் என்பது நாமறிந்ததே.  அதே நேரத்தில் நமது பணி அந்த மனிதனுக்கு உண்மையையும் சத்தியத்தையும் இறை வசனங்களையும் நபி மொழிகளையும் எத்தி வைத்து அவனை

குழப்பத்தில் உழலும் மக்களுக்கு முஸ்லிம்கள் ஆற்றவேண்டிய கடமை

தஃவா பயிற்சி வகுப்புகளில் முஸ்லிம்களுக்கு சொல்லப்படும் உதாரணம் இது.

போக்குவரத்து நெரிசல் உள்ள ஒரு இடத்தில் கடமையாற்றும் ஒரு டிராபிக் போலீஸ்காரரைப் போன்றது முஸ்லிமின் நிலை. அவர் தான் கடமையாற்ற வேண்டிய நேரத்தில் அருகிலுள்ள டீக்கடையில் போய் அமர்ந்தாலோ  அல்லது வேறு எங்காவது போய் தூங்கிக்கொண்டிருந்தாலோ என்ன நடக்கும்?   அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது?

ஒரு சாரார் ஒரு கருத்தை அல்லது தகவலைச் சொல்லி மற்றவர்களைக் கவருதல் அல்லது  மீது செல்வாக்கு செலுத்துதல் என்பதுதான்.

இந்த நோக்கத்திற்காக உலகின் வலுவான கருவி எது?

فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலே”  (முஸ்லிம்  1885)  இந்த இரண்டையும் பெற்றிருக்கக் கூடிய சமுதாயம் சமூக வலைத்தள செயல்பாட்டைப் புறக்கணிக்க முடியுமா?

மக்களுக்கு சத்தியம் சென்றடைவதன் மூலம் என்னென்ன நடக்கும்? விளைவுகள் :

 - தனி நபர் சீர்திருத்தம் - சமூக சீர்திருத்தம்,

 - மக்கள் நன்மைக்குயின்பால்  தூண்டப்படுதல், தீமைகள் அழிதல்

 -  நன்மையை ஏவவும் தீமை தடுக்கவும் ஒன்றிணைதல்

 - தீமைக்கும் அநீதிக்கும் எதிராக களமிறங்குதல் .

 - தர்மத்தை நிலைநாட்டுதல்

முன்மாதிரி சமூகம் மேற்கொள்ளவேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்:

- தீமைகளிலிருந்து விலகி இருத்தல்

 - கண்களையும் புலன்களையும் பாதுகாத்தல்

 - உறுதியற்ற செய்திகளைப் பரப்பாதிருத்தல்

 - தேவையற்ற காரியங்களைப் பரப்பாதிருத்தல்

 - தீமையானவற்றை  - வதந்திகளை, ஆபாசங்களை பரப்பாதிருத்தல்

 - ஹிக்மத்தோடு நடந்து கொள்ளுதல்

 - மாற்றுமத கடவுளர்களை எசாதிருத்தல்

 - தீய சொற்களையும் வசை பாடுதலையும் தவிர்த்தல்

 - நீங்கள் இஸ்லாத்தின் பிரதிநிதி என்ற உணர்வோடு செயல்படுதல்

இறைவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வு மிகமுக்கியமானது சமூக வலைத்தளத்தில் செயல்படுவோருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரர்களே அடுத்ததாக சமூக வலைதளங்கள் மூலமாக எவ்வாறு அசத்தியம் அல்லது பொய் பரவுகிறது.. அதை பயன்படுத்தி எவ்வாறு சிலர் ஆதிக்கத்திற்கு வருகிறார்கள் என்பது பற்றிய சுருக்கமான தகவல்களை கவனிப்போம்...

சமூக வலைதள செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள்  அறிய வேண்டிய முக்கியமான அம்சம்

=  ஃபேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் காணப்படும் லைக்குகள் அல்லது ஷேர் அல்லது கமெண்ட்டுகள் என்பவை எப்போதும் இயற்கையானவையாக இருப்பதில்லை. உதாரணமாக தேர்தலின்போது ஒரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ முக்கியத்துவம் கொடுத்து பப்ளிசிட்டி செய்யவேண்டுமானால் அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதைப் போல் காட்ட முடியும் அதற்காக வேலை செய்பவை இந்த டிஜிட்டல் ஆர்மிகள். அதற்காக வேலை செய்யும் கம்பெனிகளும் மென்பொருள் நிறுவனங்களும் அதிக அளவில் பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. உதாரணமாக இன்றைய பாரத பிரதமர் பதவிக்கு வருவதற்கு பல அமெரிக்க கம்பெனிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தன. இன்றும் இருக்கின்றன இன்றைய பாசிச சக்திகள் பெரும் ஆதிக்கத்தை இதில் செலுத்தி வருகின்றன அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவர்கள்தான் அரசாட்சி செய்ய முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது.

= இங்கு நாம் பதிவிடக் கூடிய அனைத்து ஆடியோ வீடியோ போட்டோக்கள் அனைத்தையும் கண்டிப்பாக டவுன்லோட் செய்ய கோரிக்கை வைக்கிறோம்.

= ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்குத் தூற்றுதல், பாலியல் சீண்டல், பாலியல் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட எதிர்வினைகளைப் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்கள் யாரோ சில தனிமனிதர்களே என நினைத்திருப்போம். ஆனால், இத்தகைய இணைய வம்புகளை (டிராலிங்) குறிப்பிட்ட முறையில், குறிவைத்துச் செயல்படுத்த ஆயிரக்கணக்கானோர் முழு நேர வேலையில் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போக்குக்குப் பின்னால் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளதைப் பெரிய அளவில் அம்பலப்படுத்தியவர், டெல்லியைச் சேர்ந்த மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி.

===============  

தன் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான இணைய வசவுகள் குறித்து போலீஸில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதபட்சத்தில், தானே அவற்றின் ஊற்றுக்கண்ணைப் புலனாய்வுசெய்யத் தொடங்கிய சுவாதி, இரண்டு ஆண்டுகளாகத் தான் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து, ‘ஐ ஆம் எ டிரால்என்கிற புத்தகமாக வெளியிட்டார்.  அந்த புத்தகம் பற்றிய விவரங்களை விகடன் வெளியிட்டு இருந்தது  அதை அனைவரும் படித்து வைத்துக்கொள்ளுங்கள். https://www.vikatan.com/government-and-politics/politics/77069-secret-world-of-bjps-digital-army--iamatroll

= டிஜிடல் ஆர்மியின் சதித் திட்டங்களில் முக்கியமானவை    -மக்கள் ஆதரவை அதிகரிக்க குறிப்பிட்ட  தலைவர் அல்லது கட்சிகளுக்கு ஆதரவாக ஆதரவு அலைகளை உருவாக்குதல்

 -மக்கள் ஆதரவைத் தக்கவைக்க அவர்களின் ஹீரோக்களின் கூற்றுக்களை  நூற்றுக்கணக்கில் லைக் செய்தல்,பகிர்தல், மறு ட்வீட் செய்தல் போன்றவை 

 - குறிப்பிட்ட தலைவர்களின் புகழை நிலைநிறுத்த  அவர்களின் பக்கங்களை கண்காணித்தல், எதிர் கருத்துக்களுக்கு விஷமமாக பதிலளித்தல், கமென்ட் செய்பவர்களை வசைமொழிகளால் தூற்றுதல், மிரட்டுதல் போன்றவை.

 - எதிர் தலைவர்களைப் பற்றி தவறான மற்றும் எதிர்மறையான இமேஜை  உருவாக்கி அவர்களின் நற்பெயரைக் கெடுத்தல்,.

 அதற்காக வீடியோக்களையும் இடுகைகளையும் உருவாக்கி அவற்றை வைரலாகப் பரவவிடுதல்

- Fb மற்றும் Twitter இல் நூற்றுக்கணக்கான போலி ஐடிகளை உருவாக்குதல்.

================ 

 அன்பான சகோதரர்களே இன்று சமூக வலைதளங்களில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. சத்தியத்தை முறைப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்காததன் காரணமாக அசத்தியம் பூதாகரமாக உருவெடுத்து மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.. இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும் திருக்குர்ஆன் வசனப்படி 'சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்து போவதே ஆகும்' என்று கூறச் சொல்லி நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் சொல்கிறான்..

 இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் சத்தியம் வந்தும் கூட என் அசத்தியம் இன்னும் அழியாமல் இருக்கிறது?

 மிக மிக உறுதியான ஒப்பில்லாத சத்தியம் நம் அனைவர் கைவசம் இருந்தும் ஏன் அசத்தியம் நன்மை ஆட்டிப்படைக்கிறது?

 விடை நம் அனைவருக்கும் தெரிந்ததே.. சத்தியத்தை கைவசம் வைத்திருக்க கூடிய முஸ்லிம்கள் அதை முறைப்படி மக்களுக்கு கொண்டு செல்லாமல் இருந்தது என்பதுதான் அல்லவா?

----------------

எண்ணத் தூய்மை:

அன்பான சகோதரர்களே, சத்தியத்தை - இஸ்லாத்தை - மக்களுக்கு எத்திவைக்கும் பணியில் ஈடுபடும்போது நமது எண்ணத்தை தூய்மையானதாக ஆக்கக் கொள்ளவேண்டும். ஒரு தாஇ பேணவேண்டிய அனைத்து முன்னேச்ச்சரிக்கைகளும் பேணியாக வேண்டும். நமது நோக்கம் நாம் எத்திவைக்கும் செய்தியால் அவருக்கு மனமாற்றம் அல்லது சீர்திருத்தம் அல்லது ஹிதாயத் இவற்றில் ஏதாவது நிகழவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே இதைச் செய்கிறேன் என்ற உணர்வு நமக்கு கட்டாயம் வேண்டும். நாம் பகிரும் செய்தி மூலம் நம்மைப் பற்றி மெச்சி அவர்கள் பேசிக் கொள்ளவேண்டும்... நம் கருத்து வைரல் ஆகவேண்டும்,.. அகங்காரம் போன்ற உணர்வுகள் ஷைத்தானிடம் இருந்து வருபவை. இவை நமக்குள் தலைக் காட்டும் பட்சம் உடனடியாக 'அஊது பில்லாஹி மினஷைத்தானிர்ரஜீம்' என்று கூறி அல்லாஹ்வின் காவலைத் தேடிக் கொள்ள வேண்டும். சத்தியத்தைப் பகரும் போது நமது நோக்கம் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்ய மறந்துவிடக்கூடாது. சத்தியத்தை பகிரும்போது நம்மை நாம் மறந்துவிடவும் கூடாது. எதன்பால் அழைக்கிறோமோ அது நம்மில் குடிகொண்டு இருக்கவேண்டும்.  

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) ஒருவர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தன்னுடைய செக்கைச் சுற்றி வருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, 'இன்னாரே (உமக்கேன் இந்த நிலை?) நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக் கொண்டிருக்(கும்) நற்பணி செய்து கொண்டிருக்)கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர், 'நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்' என்று கூறுவார்கள். (புகாரி)


No comments:

Post a Comment