Tuesday, July 15, 2014

மறுமை நம்பிக்கை தேவையா?

மறுமை நம்பிக்கை தேவையாதீர்ப்பு நாளின் அவசியம் என்ன? (Day of Judgment, After Death Life, Paradise or Hell, Eternal life)

மறுமையைப் பற்றி இஸ்லாமும் மற்ற மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 

நாளை இறந்த பிறகு மறுமையில் நாம் யாரும் இறைவனிடம் இருந்து தப்ப முடியாது

எந்த மதத்தின் மறுமைப் கொள்கை உண்மை என்றும் 
எந்த மதத்தின் மறுமைப் கொள்கையை தேர்ந்தெடுத்தால் பாவம் செய்ய பயப்படுவோம் அல்லது பாவங்கள் குறையும் என்பதை பார்ப்போம்.

கிருஸ்துவ மதம், (In CHRISTIANITY)

நமது ஆண்டவராகிய இயேசு கிருஸ்து உலக மக்களின் பாவத்துக்காக சிலுவையில் இரத்தத்தை சிந்தி மரணித்து விட்டார். இயேசு கிருஸ்துவை விசுவாசம் கொண்டால் நமக்கு சொர்க்கம். எந்த பாவத்தை வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் நான் செய்யலாம். ஏன் என்றால் இயேசு கிருஸ்து எனது பாவத்துக்காக சிலுவையில் இரத்தத்தை சிந்தி மரணித்து விட்டார். இயேசு கிருஸ்துவை விசுவாசம் கொண்டதால் எனக்கும் மற்ற பாவம் செய்யும் கிருஸ்துவர்களுக்கும் சொர்க்கம் தான். ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இந்து மதம், (In HINDUISM)

நாம் பிறந்து இறந்த பிறகு ஏழு ஜென்மமாக பிறப்போம் (KARMA - RE-BIRTH), பிறகு சொர்க்கம் அல்லது நரகம் போய் சேர்வோம். இறைவனிடம் கேள்வி கணக்கு எல்லாம் கிடையாது. நாம் வாழும் இந்த ஜென்மத்தில் நாம் செய்கின்ற பாவத்தை பொறுத்து,அடுத்து ஜென்மத்தில் நாம் கீழ் ஜாதிக்காரனாக அல்லது விலங்குகளாக அல்லது பறவையாக அல்லது பூச்சியாக அல்லது புழுவாக பிறப்போம். 

பிரச்சனை என்னவென்றால் நாம் இப்போது எத்தனையாவது ஜென்மத்தில் இருக்கிறோம் என்று கூட நம் யார்க்கும் தெரியாது. 
நாம் போன ஜென்மத்தில் என்னவாக பிறந்தோம் என்றும் கூட நம் யார்க்கும் தெரியாது. 
நாம் போன ஜென்மத்தில் என்ன என்ன பாவங்கள் நன்மைகள் செய்தோம் என்றும் கூட நம் யார்க்கும் தெரியாது. 
அதனால் நாம் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். 
அடுத்த ஜென்மத்தில் நான் என்னவாக பிறந்தால் எனகென்ன. ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

புத்த மதம், (In BUDDHISM)

புத்தர்கடவுள் பற்றியோ மறுமை பற்றியோ சொர்க்கம் நரகம் பற்றியோ எதையும் பேசவில்லை. புத்தர் இந்தியாவில் பிறந்ததால்அவர் இறந்த பிறகு அவரை பின்பற்றியவர்கள் இந்து மதத்தில் இருந்து பல விசயங்களை (கர்மா) அப்படியே பின்பற்றி வந்தார்கள். புத்தரை மட்டும் கடவுளாக ஆக்கி கொண்டார்கள். 

தி.ககம்யூனிஸ்ட் மற்றும் கடவுள் இல்லை மதம்
(DARWINISM, ATHEIST, NO GOD & COMMUNIST)

கண்டதே காட்சி கொண்டதே கோலம்நாம் செத்த பிறகு மண்ணோடு மண்ணாகி  போய்விடுவோம். இந்த ஒரு உலக வாழ்க்கை மட்டும் தான் வாழ்க்கை. அதனால் நாம் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். என்னை கேள்வி கேட்க யாரும் கிடையாது. நான் தண்ணி அடிப்பேன்விபச்சாரம் செய்வேன், லஞ்சம் வாங்குவேன்வரதட்சனை வாங்குவேன்,எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். எவன் என்னை கேள்வி கேட்க முடியும். எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இஸ்லாம் ( In ISLAM )

நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை ஒரே ஒரு ஜென்மம் தான். நம்மை படைத்த இறைவன் நம்மை எந்நேரமும் கண்காணித்து கொண்டு இருக்கிறான். நமது இறப்பை இரகசியமாக வைத்துஉள்ளான். நாம் வாழும் இந்த உலகத்தில் இறைவனை சந்திக்க எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். நாம் இறந்த பிறகுநாளை மறுமையில் இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான்பிறகு நாம் செய்த செயலைப் பற்றி இறைவன் நம்மை கேள்வி கணக்கு கேட்பான். நாம் இறைவனுக்கு இணை வைக்காமல் அதாவது உண்மையான யாரும் பர்ர்க்காத இறைவனை வணங்கி நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கம். நாம் கெட்டவனாக வாழ்ந்தால் நரகம். அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை. நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்ஆனால் நம்மை படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது.

நான் என் இஷ்டத்துக்கு வாழ முடியாதுபணத்திற்க்காக நான் எதையும் செய்ய முடியாது. என்னை படைத்த இறைவன் என்னை பார்த்து கொண்டு இருக்கிறான். அவனிடம் நான் இறந்த பிறகு நான் செய்த சிறிய பெரிய அனைத்து செயல்களுக்கும் பாவங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். 

அவரவர் செய்த பாவத்துக்கு அவரவர் தான் பதில் சொல்லியாக வேண்டும். நான் செய்த பாவத்துக்கு என் தந்தையோ என் நண்பனோ என் சகோதரனோ பதில் சொல்ல முடியாது. அவர்கள் செய்த பாவத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. ஆதம் ஏவாள் செய்த பாவத்துக்கு அவர்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும்.

எனதருமை நண்பர்களே சகோதர்களே பங்காளிகளே! (FRIENDS)

நாம் எந்த மதத்தை தேர்ந்தெடுத்தால் பாவம் செய்ய பயப்படுவோம் என்பதை சிந்தித்தால் இஸ்லாம் தான் உங்கள் பதில் ஆக இருக்கும். 

எந்த மத வாழ்க்கை முறை சிறந்ததாக உள்ளது என்பதை சிந்தித்தால் இஸ்லாம் தான் உங்கள் பதில் ஆக இருக்கும். 

ஏன் இஸ்லாம் சிறந்ததாக உள்ளது என்றால் அது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல். மற்ற மதங்கள் எல்லாம் இறைவன் மார்க்கத்தில் இருந்து பிரிந்து மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள். அவை மனிதனுக்கு ஒருபோதும் நேர்வழியை அமைதியை தராது. நரகத்திற்கு தான் வழிகாட்டும். நரகத்திற்கு தான் இட்டு செல்லும்.

மறுமை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரே ஒரு உதாரணத்தின் மூலன் எளிமையாக புரிய வைக்கலாம் என்று நினைக்கிறன்.

உங்களை ஒருவன் பணத்தை வாங்கிவிட்டு திரும்ப தராமல் ஓடி போய் விட்டான். அவனை உங்களால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லைபோலிசும் கண்டுபிடிக்க முடியவில்லை,நீங்களும் இறந்துவிட்டீர்கள். அவன் எங்கு மாட்டுவான் என்று உங்களுக்கு தெரியுமா?

கிருஸ்துவ மதப்படிஅந்த நம்பிக்கை துரோகி இயேசுவை நம்பிக்கை கொண்டால் அவனுக்கு சொர்க்கம்,

இந்து அல்லது புத்த மதப்படி அந்த நம்பிக்கை துரோகி அடுத்த ஜென்மத்தில் ஏதாவதாக பிறப்பான்,

இஸ்லாம் மதப்படி அந்த நம்பிக்கை துரோகிநாளை மறுமையில் இறைவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவான். அந்த பாதிக்கப்பட்ட மனிதன் இறைவனிடம் இவனைப்பற்றி புகார் கூறுவான். அப்போது இறைவன் நீதி செலுத்துவான். அந்த நம்பிக்கை துரோகியிடம் நன்மை அதிகமாக இருந்தால் அவனின் நன்மையை எடுத்து இறைவன் இந்த பாதிக்கப்பட்டவனுக்கு கொடுப்பான்இந்த பாதிக்கப்பட்டவனிடம் தீமை அதிகமாக இருந்தால் இவனின் தீமையை எடுத்து இறைவன் அந்த நம்பிக்கை துரோகியிடம் கொடுப்பான்.

இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் மனிதன் பாவம் செய்தால்இறைவன் நாடினால் மன்னிப்பான் இறைவன் நாடினால் தண்டிப்பான்.
மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் மனிதன் பாவம் செய்தால்அந்த பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரைக்கும் இறைவன் மன்னிக்க மாட்டான். 

இந்த உலகத்தில் யாரை வேண்டுமானால் ஒருவனை நாம் ஈசியாக ஏமாற்றி விடலாம்ஆனால் நாம் மாட்டிக்கொள்வது இறைவனிடத்தில் மறுமையில் தான்.

இப்போது சொல்லுங்கள் நண்பரேஎந்த கொள்கையின் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்தால் நாம் பாவங்கள் செய்யாமல் இருப்போம்பாவங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது

இஸ்லாம் தான் நண்பரே உங்கள் முடிவாக பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். இதைவிட சிறந்த கொள்கை வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பரே.

மற்றொரு உதாரணத்தின் மூலம் உங்களுக்கு புரிய வைக்கிறேன்.

நல்லவன் கஷ்டப்படுகிறான் கெட்டவன் ஜாலியாக இருக்கிறான். ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் பணக்காரர்கள் ஜாலியாக இருக்கிறார்கள்,
மது அருந்துபவன் சிகரெட் குடிப்பவன் நல்லாதான் இருக்கான்,ஆனால் டீகாப்பிபால் குடிப்பவனுக்கு ஏன் நோய் வருகிறதுஏன் அவனை விட இவன் சீக்கிரம் செத்து போகிறான். இங்கு தான் மறுமை தேவைப்படுகிறது. நல்லவனுக்கு இறைவன் நாளை மறுமையில் சுவனத்தை வைத்துஉள்ளான். கெட்டவனுக்கு நரகத்தை வைத்து உள்ளான்.

ஒருவன் ஒரு கொலை செய்கிறான் மற்றொருவன் பத்து அல்லது நூறு கொலை செய்கிறான்அவனுக்கு இந்த உலகத்தில் அதிக பட்சமாக என்ன தண்டனையை கொடுக்க முடியும்அதுவும் சாட்சி இல்லை என்றால் அவனை தண்டிக்க முடியாது. அவன் நீதிபதிக்கு வக்கீலுக்கு லஞ்சம் கொடுத்து ஏமாற்றினால் அவனை எங்கு தண்டிக்க முடியும்அரசாங்கமே தவறு செய்தால் யார் தண்டிப்பதுஅவர்களை யார் தண்டிக்க முடியும்இங்கு தான் மறுமை தேவைப்படுகிறது.

அதைப்போல் நாம் இந்த உலகத்தில் ஒரு பாதிக்கபட்ட மனிதனுக்கு உதவி செய்கிறோம்ஒரு பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி செய்கிறோம்ஒரு பாதிக்கபட்ட குடும்பத்துக்கு உதவி செய்கிறோம்அதனால் நமக்கு இந்த உலகத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. நமக்கு கூலியை இறைவன் மறுமையில் தான் பரிபூர்ணமாக தருவான்அது தான் சொர்க்கம்.

நான் ஏன் பட்டினி கிடந்து ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்,எத்தனையோ அழகான பெண்கள் உள்ள போது நான் ஏன் ஒரு பாதிக்கபட்ட பெண்னை திருமணம் முடிக்க வேண்டும். இறைவன் நாளை மறுமையில் என்னை மன்னித்து எனக்கு சொர்க்கம் தருவான் என்பதற்காக.

ஒரு முஸ்லிமுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் அல்லது ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு சிப் கூட மது அருந்த வைக்க முடியாதுஅவனுக்கு இந்த உறுதியை கொடுத்தது எது தெரியுமாமறுமையில் இறைவன் என்னை கேள்வி கேட்ப்பான்,அவன் கேள்வி கேட்கும் போது நான் என்ன பதில் சொல்வது,நரத்துக்கு பயந்து தான்அவன் விலை போகவில்லைஇது போல்தான் அனைத்திலும். தவறு செய்யும் முஸ்லிம்களை இறைவன் மறுமையில் தண்டிப்பான்.

உதாரணமாக சவ்த் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹாஷிம் அம்லாதன் டி ஷர்ட்டில் மதுவின் விளம்பர படத்தை போட அனுமதிக்கவில்லைஇதனால் பலலட்சம் ரூபாய் அவருக்கு வருமானம் இழப்புஅவரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மதுவின் விளம்பர டி ஷர்ட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள். ஒரு முஸ்லிம் பணத்துக்காக வாழ முடியாது,பணத்துக்காக எதையும் செய்ய முடியாது,

மேலும் லண்டனில் நடந்த போன ஒலிம்பிக்கில் ஒரு முஸ்லிம் பதக்கம் வாங்கும் போதுஇங்கிலாந்தின் இளவரிசி பதக்கம் அணிவிக்கும் முன்கை கொடுக்க முயற்சி செய்யும் போதுஅந்த வீரர் கை கொடுக்க மறுத்துவிட்டார்அதை உலகமே டிவியில் பார்த்ததுஇஸ்லாம் அந்நிய பெண்ணை தொடக்கூடாதுஅன்னிய பெண்ணோடு கை குலுக்கக்கூடாது என்று கூறியதால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது இஸ்லாம்.

இந்த உண்மையான நம்பிக்கை தான் இஸ்லாம்இந்த இறைவனின் மார்க்கம் தான் இன்று நம் ஒவ்வொரு வீட்டிலும் (ENTIRE WORLD) மிக அவசரமாக தேவைப்படுகிறது. இறைவனின் மார்க்கத்தை விட்டுவிட்டு வேறு எந்த மதத்தை எந்த மார்க்கத்தை தேடுகிறோம்நண்பர்களே?

மறுமை எப்படி சாத்தியம்இறைவனால் மீண்டும் நம்மை உயிர்பிக்க முடியுமா ?

சிலருக்கு இப்படியும் சந்தேகம் இருக்கலாம்நம்மை எரித்த பிறகோ அல்லது நாம் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு மீண்டும் நாம் எப்படி உயிர்பிக்க முடியும்?இது எப்படி இறைவனுக்கு சாத்தியம் என்று நம்மில் பல பேர் சிந்தித்து பார்த்து இருப்போம். நமது முதல் பிறப்பை சிந்தித்தாலே இதற்கு பதில் கிடைத்து விடும்.

நாம் நம் தாயின் கருவறையில் திடிர் என்று எப்படி கருவானோம்,நமக்கு இந்த உடலை தலை கை காலை செய்தது யார்உயிரை கொடுத்தது யார்நாம் தாயின் கருவறைக்கு வருமுன் எங்கு இருந்தோம்எப்படி இருந்தோம்என்பது நமக்கு தெரியுமா?திடிரென்று ஒரு துளி விந்திலிருந்து நம்மை படைத்தது யார்

எதுவும் முதலில் படைப்பது தான் கடினம்மீண்டும் படைப்பது எளிது. நமது உடலுக்கு தான் சாவு தவிர நமது உயிர்க்கு சாவு இல்லை என்பதை புரிந்து கொண்டாலே போதும். இறைவனால் முடியாதது எதுவும் இல்லைஇறைவனால் எதுவும் செய்ய முடியும் என்பதையும் புரிந்து கொண்டாலே போதும். நம்மை முதலில் படைத்த இறைவனுக்கு நம்மை மீண்டும் படைக்கவா முடியாது. மனிதனை படைப்பதை விட இந்த எண்ண முடியாத பால் வெளியை, வானம் பூமியை படைப்பது மிக கடினம்,வானத்தை தூணின்று படைப்பது மிக மிக கடினம்அவனுடைய படைப்புகளை இதுவரை நம்மால் எண்ணி முடிக்கவே முடியவில்லைஇன்னும் கண்டு பிடித்து கொண்டே இருக்கிறோம். அப்படிப்பட்ட இறைவனால் நம்மை மீண்டும் படைக்காவா முடியாது நண்பர்களே!

நீயா நானா ? Fifty Fifty Chance for me and you (50%-50%)

இன்னும் இஸ்லாத்தை ஏற்று கொள்ள தயக்கமாஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். இப்போது நம்மில் யார் சொல்வது உண்மை என்று உங்களுக்கு தெரியும். 

இருந்தாலும் ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் இருந்தால் (50% Chance for you) நாம் இறந்த பிறகு இன்னொரு ஜென்மத்தில் பிறப்போம் அல்லது மண்ணோடு மண்ணாகி விடுவோம்,அப்போது நாம் இருவரும் தப்பித்து விடுவோம். நாம் இருவரும் அடுத்த ஜென்மத்தில் எதுவாகவோ பிறப்போம் அல்லது மண்ணோடு மண்ணாகி போய்விடுவோம். 

ஒரு வேளை நான் சொல்வது உண்மையாக இருந்தால் (50%Chance for me) நீங்கள் மாட்டி கொள்வீர்கள். நான் தப்பித்து கொள்வேன். நாம் வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது. அங்கே இறைவன் முன் கதறி அழுதாலும் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது.  நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை இந்த ஒரே ஒரு வாழ்க்கை தான். நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பணம் தான் வாழ்க்கை அல்ல குணம் தான் வாழ்க்கை என்று இஸ்லாம் போதிக்கிறது. பணத்துக்காக எதையும் செய்யக்கூடாது மற்றும் நமது வாழ்க்கையின் நோக்கம் ஒழுக்கமும் நல்ல குணமும் தான் என்று இஸ்லாம் போதிக்கிறது. 

இறைவன் நம்மை எந்நேரமும் பார்த்து கொண்டு இருக்கிறான்.

இன்று மனித குலத்துக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். இந்த மண்ணுகேற்ற மார்க்கம் இஸ்லாம் தான். மனிதன் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் அனைவரும் பின்பற்றக்கூடியதாகவும் செயல்முறையிலும் செயல்படுத்தவும் எளிமையாகவும் உள்ளது. ஏன் என்றால் இஸ்லாம் இறைவனால் மனித குலத்துக்கு அருளப்பட்ட மார்க்கம். இயற்கையானது. இஸ்லாம் மனிதனுக்கு நல்லதையே போதிக்கிறது தீயதை விட்டும் மனிதனை தடுக்கிறது.

மற்ற மதங்கள் அனைத்தும் மனிதனை நேரான வழியில் இருந்து தடுக்கிறது. உண்மையான யாரும் பார்க்காத ஒரே இறைவனை வணங்குவதில் இருந்து மனிதனை தடுக்கிறது. தீயது செய்தால் உனக்கு கடுமையான தண்டனை மறுமையில் நரகத்தில் கிடைக்கும் என்று மனிதனுக்கு போதிக்கவும் வில்லை. அவனை தீயதை விட்டும் தடுக்கவும் வில்லை.

நண்பர்களே! காலம் தாழ்த்தி யோசிக்காமல் உடனே இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை தழுவுங்கள். நீங்கள் ஒருவேளை காலம் தாழ்த்தினால்அதற்குள் மரணம் வந்துவிட்டால் நாளை மறுமையில் கதறி அழுது ஒரு பிரயோஜனமும் இல்லைநமக்கு கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை தான். நம்மை படைத்த இறைவனிடம் நேர்வழியை கேளுங்கள். உண்மையை ஏற்றுகொள்ளும் மனோ பக்குவத்தையும் மனோ தைரியத்தை தரும்படி வல்ல இறைவனிடம் கேளுங்கள். 

நம்மால் நரக நெருப்பை தாங்கி கொள்ளவே முடியாதுநரக தண்டனையை ஒப்பிடும்போது இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம் ஒன்றமில்லை. 

நாம் தான் நம் குடும்பத்தாரையும் நண்பர்களையும் உறவினர்களையும் நரகத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்,அவர்களுக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து சொல்ல வேண்டும்.   

-- 
with peace,
Shajahan Mohamed Umer

No comments:

Post a Comment