Sunday, November 4, 2018

நம்மை ஆள்பவர்களை ஆள்வது யார்?

நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்?
தமிழகத்தின் மீது திணிக்கப்படும் போராட்டங்கள்
கோவை மேட்டுப்பாளையம் அருகில் 90 களில் நடந்த பவானி ஆற்றில் கலந்த விஸ்கோஸ் ஆலையின் கழிவுகளுக்கு எதிரான போராட்டம்  தொடங்கி, தொடர்ந்து நடந்த கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், மீத்தேன்ஹைட்ரோகார்பன்கெயில் எரிவாயு குழாய்நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டங்கள், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், விவசாய நிலங்களை பலவந்தமாக அழித்து எட்டுவழிச் சாலை அமைக்கத்  துடிக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்.. என தொடர்ச்சியாக போராட்டமே வாழ்க்கை என்ற நிலை தொடர்ந்து தமிழகத்தில் நீடிப்பதை நாம் கண்டும் அனுபவித்தும் வருகிறோம். சமீபத்தில் நூறு நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசால் மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். ‘பொதுமக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், நமக்கு அவர்களின் உடமைகளும் சம்பாத்தியமுமே இலக்கு’ என்ற தீராத வெறியோடு இயங்கும் சுயநல சக்திகள் இவற்றின் பின்னால் இருப்பதை நாம் உணர முடியும்.
 இவ்வாறு மக்களின் அமைதியைக் குலைத்து அவர்களை ஓயாமல் அலைகழித்து வருவோர் யார்? 
இக்கேள்விக்கு பதிலாக நம் விரல்கள் நம்மை ஆண்டுவரும் முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆகியோரையும் அவர்களைச் சார்ந்த அரசியல் வாதிகளையுமே சுட்டிக்காட்டும். ஆனால் உண்மை அதுவல்ல. மாறாக உண்மையில் இங்கு இடம்பெற்றுள்ள படத்தில் காணும் பொம்மலாட்டத் தொடர்தான் இன்று நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை சற்று அவதானிப்போர் உணரலாம். பல்வேறு மட்டங்களில் பல கைப்பாவைகள் மேல்மட்ட கைப்பாவைகளால் இயக்கப்படுகின்றன. நாம் யாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகிறோமோ அவர்கள் வெறும் கீழ்மட்டக் கைப்பாவைகள் மட்டுமே!
சமீபத்தில் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் உயிரிழப்புக்களுக்கும் காரணமானவர்கள் என்று காவல் துறையையும் மாவட்ட ஆட்சியரையும் முதலமைச்சரையும் பிரதமரையும் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் அவர்கள் அல்ல. இவர்களெல்லாம் கைப்பாவைகளே. அவர்களை யார் இயக்கி தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள்! அவர்கள்தான் இந்த பொம்மலாட்டத் தொடரின் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார்கள்.
இவர்கள் யார்?
= அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகள் கூட்டமைப்பு என்பார்கள் சிலர் .
= இல்லுமினாட்டிகள் என்பார்கள் சிலர்.
= உலகத்தின் செல்வங்கள் யாரிடம் குவிகிறதோ அந்த ஒரு சதவீதம் செல்வந்தர்களின் கூட்டம் என்பார்கள் சிலர்.
அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் உதாரணம் மூலம் தெளிவடைந்து வருகின்றது. அவர்கள் முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட பண வெறியர்கள். மக்கள் எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும். அவர்கள் அழிந்தொழிந்தாலும் சரிநாடு நாசமானாலும் சரிஇயற்கை வளங்கள் அழிந்தாலும் சரி நமக்குத் தேவை பணம் என்று செல்வத்தை மேலும் மேலும் குவிப்பதில் கண்ணைமூடிக்கொண்டு அந்த கும்பல் வெறியோடு செயலாற்றி வருகிறது.
அக்கும்பல் எல்லா மட்டத்திலும் தங்கள் கைப்பாவைகளை முன்னிறுத்திக் கொண்டு மறைமுகமாக செயல்படுவதால் அவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமான செயலாகவே உள்ளது. ஆனாலும் நாம் சந்திக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் மூல காரணம் அவர்களே என்பது தெளிவு. அவர்களைத்தான் மக்களின் நலனுக்காகப் போராடுவோர் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும்.
வலுவற்ற போராட்டங்கள் தீர்வல்ல!
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை மீட்பதற்காக போராடும்போது அவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸ்காரர்கள் மீது கல்லேறிவதாலோ அவர்களின் மேலதிகாரிகளை முற்றுகையிடுவதாலோ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவது கிடையாது. மாநில அல்லது மத்திய அரசைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ தேர்தல்களில் ஓட்டுபோட்டு அகற்றுவதாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. காரணம் உச்சாணிக்கொம்பில் இருக்கும் கொடியோர்கள் பயங்கரமான சதிவலையை நாடங்கும் உலகெங்கும் பின்னி உள்ளார்கள். தங்கள் கைப்பாவையாக செயல்படுபவர்களை மட்டுமே நாடாள அனுமதிக்கிறார்கள். மறுப்பவர்களை விலைக்கு வாங்கவும் மிரட்டி அடிபணிய வைக்கவும் அல்லது தீர்த்துக் கட்டவும் செய்கிறார்கள். வலிமையான தந்திரங்களும் வழிமுறைகளும் அவற்றை செயல்படுத்தத் தேவையான ஆதிக்கமும் இவர்கள் கைவசம் உள்ளன. ஊடகங்கள் மூலம் மக்களை மூளை சலவை செய்து இவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்
தங்கள் சுயநலத்திற்காக நாட்டு வளங்களையும் இயற்க்கை வளங்களையும் தாங்கள் நியமித்த கைப்பாவைகளின் துணைகொண்டு கொள்ளையடிக்கும் இவர்கள் யார் என்பது மர்மமாக இருப்பதால் இவர்களை நாம் தற்போது ‘கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்’ என்றே அழைப்போம்.
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள்உயர் அதிகாரிகள்காவல்துறைமாஃபியாக்கள்நீதித்துறைதேர்தல் கமிஷன்சி பி ஐவருமானவரித்துறைஊடகங்கள்பணப்புழக்கம் என அனைத்தையுமே கையாகப்படுத்தி உள்ளன இந்த கார்பரேட் ஆதிக்க சக்திகள். இவ்வளவும் கைவசம் இருக்கும்போது தங்கள் சதித் திட்டங்களுக்கு ஒத்துழைக்காதவர்களை சரி கட்டுவதும் தீர்த்துக் கட்டுவதும் இவர்களுக்கு கடினமான காரியமா என்ன?
எவ்வாறு அடைந்தார்கள் ஆதிக்கத்தை?
இதைப் புரிந்து கொள்ள நீங்கள் பணம் வந்த கதையை தெரிந்தாக வேண்டும்.
ஆரம்பத்தில் பண்ட மாற்று முறையில் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மெல்ல மெல்ல தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் நடந்தது. அப்போது நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். அவையே பிற்காலத்தில் வங்கிகளாக உருவெடுத்தன. வங்கியாளர்கள் தங்களிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு பகரமாக வாக்குறுதிப் பத்திரங்களை கையொப்பமிட்டு - அதாவது ரசீதுகளை நாணயங்களின் உரிமையாளர்களுக்குக் கொடுத்தார்கள். தங்கள் சேவைக்கு கட்டணமும் வசூலித்தார்கள். நாள் செல்லச்செல்ல மக்கள் அந்த ரசீதுகளையே நாணயங்களுக்கு பதிலாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு வியாபாரம் செய்தார்கள். ரசீதுகளைக் கொண்டே காரியங்கள் நடைபெறுவதால் மக்களில் எவருக்கும் வங்கியில் இருந்து நாணயங்களைத் திரும்பப் பெறும் அவசியமே ஏற்படவில்லை.
வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம்:
இவ்வாறு நீண்ட காலமாக தங்களிடம் தங்க நாணயங்கள் உறங்கிக் கிடப்பதைக் கண்ட வங்கி உடைமைகள் தாங்கள் மக்களோடு செய்துகோண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக அவற்றை மறைமுகமாக மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து வட்டியும் ஈட்ட ஆரம்பித்தார்கள். அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட வங்கியாளர்களின் ரசீதுகளையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். தொடர்ந்து தாங்கள் கையெழுத்திட்டு வழங்கும் ரசீதுகள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட வங்கியாளர்களுக்கு அது அலாதியான தைரியத்தை கொடுத்தது. தங்கள் இச்சை போல விரும்பிய மதிப்புக்கு விரும்பிய எண்ணிக்கையில் அச்சடித்து அதை விநியோகித்தார்கள். அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்!
வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்திற்கு வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்லஅவற்றைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள். சமூகத்தில் மற்றவர் அனைவரையும் அடிமையாக்கும் அந்தஸ்திற்கு உயர்ந்தார்கள். நாட்டை ஆள்வோரையும் அடிமைகளாக்கினார்கள். அல்லது தங்களின் கைக்கூலிகளைக் கொண்டு நாட்டை ஆண்டார்கள். ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
============
இப்போது யோசித்துப்பாருங்கள்... ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும்அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாதுஉலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாதுஆம்அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_3
உலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாதுஆம்அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
உலகாளும் காகிதம் டாலர்
-------------------------------------------
1910ம் ஆண்டு ரோத்ச்சைல்டுராகஃபெல்லர்ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும்அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அவ்வாறு அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. இந்தத் தனியார் வங்கி அச்சடித்து வெளியிடும் வெற்றுத்தாள்தான் டாலர் என்ற உலகக் கரன்சி!
முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ்பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கிஇந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World... https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia, Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan... இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம்.
அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள்பெட்ரோலிய வளங்கள்நிலத்தடி வளங்கள்விளைபொருட்கள்இயற்கைவளங்கள்உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள்நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள்உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள்இராணுவத் தளவாடங்கள்விமானங்கள்கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள்மருந்துக் கம்பெனிகள்பத்திரிகைகள்டிவிக்கள்ஊடகங்கள்பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது எனலாம். பணம்ஆயுதம்அரசாங்கம்ஊடகம்பயங்கரவாதம்இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?
(தொடரும் )

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_4
உலகை ஆளும் வஞ்சக வலை
உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த இரகசிய சமுதாயம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.
அமெரிக்கா உட்பட உலக நாடுகளை யார் ஆளவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் ஆங்காங்கே உள்ள இவர்களின் கம்பெனிகளும் நிறுவனங்களும் அடியாட்களும் அந்தந்த நாட்டு வளங்களை சுரண்டும் அல்லது உறிஞ்சிஎடுக்கும் பணிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஆட்சியாளர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.
= அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் மூலம் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல்அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல்ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல்நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
(தொடரும்)

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_5
நம்மை யார் ஆள்கிறார்கள் என்பதைவிட #நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்என்பதே இத்தொடருக்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும்.
நாம் இன்று தமிழகத்தில் யாருக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாமே அவர்களுக்கு மேலுள்ளவர்களின் கைப்பாவைகள் என்பதை நாம் முக்கியமாக அறியக் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வலிமையையும் சதித்திட்டங்களையும் பற்றி அறிந்துகொண்டால் மட்டுமே நமது போராட்டங்கள் பயனுள்ளதாக அமையும். இல்லையேல் அவை நீர்த்துப்போகும் வாய்ப்புகள் உண்டு... இனி தொடரைத் தொடர்வோம்
------------------
நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு உலகநாடுகளைக் கட்டுப்பட வைக்கிறார்கள். இதுபோல தங்களின் ஆதிக்கத்திற்கும் உலகைச் சுரண்டும் வஞ்சகப்பணிக்கும் தடையாக எப்பேர்பட்ட கொம்பர்கள் அல்லது மக்கள் இயக்கங்கள் நின்றாலும் அவற்றை எப்பாடுபட்டாவது நிர்மூலமாக்குகிறார்கள் அல்லது உரிய முறையில் அவர்களைக் கையாண்டு பணிய வைக்கிறார்கள். பணிய மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உதாரணம் சத்தாம் ஹுசைன்கத்தாஃபி போன்றோர். இலட்சக்கணக்கான அப்பாவிகள் அல்லது குழந்தைகள் கொல்லப்படுவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சக்திவாய்ந்த ஆயுதங்களும் கையாட்களும் இவர்களின் பணியை எளிதாக்குகின்றனர். இவர்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மக்களுக்கு முன் இவர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இவர்களை எதிர்போரை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து மூளைச்சலவை செய்கின்றன.
சமீபத்தில் லிபியாவின் கடாபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சமீபத்தில் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )
பலியாடாக இந்திய மக்கள்
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பின் தொடர்ச்சியாக நம் நாடும் மற்ற நாடுகளைப் போல் தொடர்ச்சியாக இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நமது ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழேதான் உள்ளது எனும்போது நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் இவர்கள் கணிசமான பங்கை உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இன்று இந்திய மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடும் இந்தக் கயவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பாகமே என்பதை சிந்திக்க முனைவோர் அறியமுடியும். பாமர மக்கள் முதற்கொண்டு அனைவரையும் வங்கிகளுக்கு அடிமையாக்கி அவர்களின் உழைப்பிலிருந்தும் சேமிப்பில் இருந்தும் தங்களுக்கு வேண்டியதை உறிஞ்சிஎடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் நாடகங்களே மற்றவை எல்லாம்! அப்பாவிப்பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்த அபராதத் தொகை அவர்கள் ஈட்டிய லாபத்தை விட அதிகம் என்கிறது சமீபத்திய தகவல்.
இவ்வாறு இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
(தொடரும்)
     



#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_6
இன்று தூத்துக்குடியில் நாம் போராடிக்கொண்டு இருப்பது இந்தக் கொடியோர்கள் நியமித்த கைப்பாவைகளோடும் கைக்கூலிகளோடும்தான் என்பதை இனியாவது உணரக் கடமைப்பட்டுள்ளோம். உலகெங்கும் பரவிக்கிடக்கும் இயற்க்கை வளங்களையும் எண்ணெய்உலோகம்தாதுக்கள் போன்ற நிலத்தடி வளங்களையும் கையகப்படுத்த பெரும் சதித்திட்டங்களை உலகெங்கும் நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் ஒரு சிறிய ஒன்றுதான் இந்த ஸ்டெர்லைட் சதி!
இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஊர்மாநிலம் அல்லது நாடு என்பது அங்குள்ள வளங்களும் செல்வம் கொழிக்கும் துறைகளும்தான். அவற்றை அடைவதற்கு ஏற்ற முறையில் உலக அரசியலை தங்கள் கைப்பாவை ஆட்சியாளர்களையும் அரசர்களையும் கைக்கூலிப் படைகளையும் கொண்டு தந்திரமாக நடத்துகிறார்கள். மக்களிடையே பிரிவினைகளை பயன்படுத்தி பிரித்தாளுதல்உள்நாட்டுக் கலவரங்கள் மூட்டி ஆள்வோருக்கு நெருக்கடி கொடுத்தல்நாடுகளுக்கிடையே வெறுப்பை மூட்டி அவைகளைப் போர்முனையில் நிறுத்துதல், . ஊடகங்களைக் கொண்டு நாடகங்கள் நடத்தி தங்கள் செயல்களை மக்களுக்கு முன் நியாயப்படுத்துகிறார்கள். அவர்களே தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகளுக்கு விற்கவும் செய்கிறார்கள். இலட்சக்கணக்கில் பாமர மக்கள் மடிவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. முழுக்க முழுக்க பணவேட்டை மட்டுமே இக்கொடியோர்களின் குறிக்கோள்.

போராடி வெல்ல முடியுமா ?
அனைத்து நாட்டு அரசாங்கங்கள்சர்வதேச வங்கிகள்அணுஆயுதங்கள்ராணுவ தளவாடங்கள்எண்ணெய் கிணறுகள்ஊடகங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை ஆண்டுவரும் இக்கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.
(தொடரும்)

ube.com
#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_7
----------------------------------------------------
ஜல்லிக்கட்டுநீட் தீர்வுஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு இவைகளைத் தொடர்ந்து தமிழக மக்கள் எதிர்கொள்ள இருப்பது விவசாயிகள் பிழைப்பில் மண்ணைப் போடும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டம்! ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் இப்போராட்டங்களை நாம் முறையாக எதிர்கொள்கிறோமா என்பதுதான் நாம் அவசரமாக ஆராயவேண்டிய கேள்வி!

அனைத்து நாட்டு அரசாங்கங்கள்சர்வதேச வங்கிகள்அணுஆயுதங்கள்ராணுவ தளவாடங்கள்எண்ணெய் கிணறுகள்ஊடகங்கள்செல்வம் கொழிக்கும் துறைகள் ... என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை தங்கள் வஞ்சக வலைக்குள் கட்டிவைத்து ஆண்டுவரும் கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.. இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.

தீவிரப் போராளிகளைத் தீர்த்துக் கட்டுதல்பயமுறுத்தல்ஆசை காட்டுதல்விலைக்கு வாங்குதல் என ஏதாவது ஒன்றின் மூலம் வீழ்த்தி விடுகிறார்கள். ஓரளவுக்கு வீழாதவர்கள் கம்யுனிச சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகள் மூலம் வீழ்த்தியுள்ளார்கள். எதிர்த்துப் போராடும் மக்களிடையே உள்ள கொள்கை வெற்றிடத்தை (ideological vacuum)யும் பிரிவினைக் காரணிகளையும் சந்தர்பவாத அரசியல்வாதிகள் மற்றும் இனப்போராளிகள் ஆகியோரையும் நன்றாகவே ஆய்வு செய்து வைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள்.
இவர்களை எதிர்த்து நின்ற சோவியத் ரஷ்யா என்ற வல்லரசே சிதைக்கப் பட்டிருக்கும் போது ஒரு மொழி சார்ந்த அல்லது இடம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த குறுகிய இயக்கங்கள் எப்படி வெற்றி ஈட்ட முடியும்இவர்களை எதிர்த்துப் போராட - உறுதியான - வலுவான- கொள்கை சார்ந்த இயக்கம் தேவை. இதை மக்கள் உணர்ந்து ஆவன செய்யாதவரை பிரச்சினைகள் கண்டிப்பாக தீரப்போவது இல்லை.

குறுகிய நோக்கம் கொண்ட இயக்கங்களின் குறைபாடுகள்
- கொள்கை வெற்றிடம் (ideological vacuum):
------------------------------------------------------------------
ஒரு மொழியைஒரு நாட்டை அல்லது ஊரைஇனத்தை அல்லது ஒரே நிறத்தை அடிப்படையாக வைத்து அந்த மக்களிடையே உறுதியான பிணைப்பை ஏற்படுத்தவோ அவர்களை இணைத்து வைக்கவோ முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் நல்லோரும் இருப்பர்தீயோரும் இருப்பர். பொதுநலவாதிகளும் சுயநலவாதிகளும் இருப்பர். இப்படிப்பட்ட முரண்பாடான குணமுடையவர்கள் ஏதேனும் ஒரு தலைவரின் ஆவேசப் பேச்சைக் கேட்டுவிட்டு அதன்பின் இணைந்து போராடி தங்கள் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் என்ன நடக்கும்? .... தலைவர்கள் கொள்கை ஏதும் இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது தனிநபர் ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தாலோ அவர்கள் எதிரிகளுக்கு எளிதில் விலைபோய் விடுவார்கள். எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கோ அல்லது மிரட்டலுக்கோ உட்பட்டு அடிபணியவும் நேரிடும். மறைமுகமாக செயல்படும் கைக்கூலிகளாக மாறவும் கூடும். இவ்வாறும் முழு போராட்டத்தையும் வீணடிக்கப்படும் அபாயம் உண்டு. எனவே போராடும் மக்களின் மற்றும் தலைவர்களின் கொள்கையின் தரமும் ஈடுபாடும் மிகமிக அவசியமான ஒன்று.

#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_8
ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிக்கும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படும் தமிழக மக்களை ஒன்றிணைக்கக் கூடிய இயக்கமும் கிடையாது.. கொள்கையும் கிடையாது ... கொள்கையில் உறுதியாக நிற்கக்கூடிய தலைவர்களும் கிடையாது தொண்டர்களும் கிடையாது. இந்த பலவீனத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள். கொள்கை வெற்றிடம்மக்களின் சினிமா மோகம்ஜாதி மத வேறுபாடுகளால்பிரிவினைகள்ஒரே ஜாதிக்குள் மதத்தில் பிரிவினை விதைக்கும் ஈகோவை விட்டுக் கொடுக்காத தலைவர்கள்மிரட்டலுக்கும் விலைபேசலுக்கும் பணிந்து போகக் கூடிய தலைவர்கள்போன்ற அனைத்தும் கார்ப்பரேட் சக்திகளுக்கு சாதகமாக உள்ளது . எனவே அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போக செய்யமுடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
குறுகிய நோக்கம் கொண்ட தமிழக இயக்கங்களின் அடுத்த பலவீனம் சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை அறியும் தொலைநோக்குப் பார்வை கிடையாது என்பது..

நியாயம் அநியாயம் பிரித்தறிதல்:
இனம் அல்லது மொழி அல்லது ஜாதியின் அடிப்படையில் நியாயம் - அநியாயம் அல்லது சரி- தவறு இவற்றை பிரித்தறிவது அல்லது அடையாளம் காண்பது சரியாஎன்ற கேள்விக்கு நாம் விடைகாண வேண்டும். 'நம் இனத்தவன் செய்தால்அது எப்போதும் சரியாக இருக்கும்என்றோ 'எதிரி இனத்தவன் செய்தால் எப்போதும் அது தவறாகத்தான் இருக்கும்என்றோ யாருமே கூற மாட்டார்கள். எனவே ஒரு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கும் முன் நியாயம்அநியாயம் அல்லது நன்மைதீமை இவற்றை பிரித்தறிய நம்மிடம் என்ன அளவுகோல் உள்ளது என்பதை அவசியம் பார்க்கவேண்டும். இதைத் தீர்மானிக்காமல் போராடினால் மிஞ்சுவது குழப்பமும் வெறும் உயிர் இழப்புக்களும் பொருள் இழப்புக்களும் மட்டுமே.

பிணைப்பு நிலையற்றது
= அடுத்ததாக ஜாதியோ மொழியோ உண்டாக்கும் பிணைப்பு நிரந்தரமானதல்ல எளிதில் உடையக்கூடியது! ஒரே மொழி அல்லது இனத்தவரிடையே கொள்கை வேறுபாடுகளும் நம்பிக்கை வேறுபாடுகளும் பழக்கவழக்க வேறுபாடுகளும் சகஜம். பிறகு எந்த அடிப்படையில் இணைந்து பணியாற்றுவதுஎனவே இவற்றால் ஆக்கபூர்வமான எதையுமே சாதிக்க முடியாது என்பது திண்ணம்!
தீர்வு என்ன?
ஆகஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு என்ன தேவைநடுநிலையோடு ஆராய்வோம் வாருங்கள்...
(தொடரும்)
#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_9

நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது...
நாட்டு மக்களின் உடமைகளையும் உற்பத்திகளையும் சம்பாத்தியங்களையும் நம்மை ஆள்பவர்களைக் கைப்பாவைகளாக பயன்படுத்தி உறிஞ்சி வருகிறார்கள் கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள். இதை நாம் இன்று தெளிவாகவே உணர்கிறோம். ஆனாலும் இக்கொடூரர்களின் அநீதிகளுக்கு எதிராக இன்று மக்கள் ஏன் உறுதியான போராட்டத்தை முன்வைக்க முடியவில்லைகாரணங்களை கடந்த பதிவுகளில் கண்டோம். சரிநமக்கு எப்படிப்பட்ட இயக்கம் தேவைஅறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கீழ்கண்டவை அவசியம் தேவை என்பதை நீங்கள் உணரலாம்:

= ஜாதிமொழிநிறம்இனம் இவைபோன்ற மனிதனைப் பிரிக்கும் அனைத்து விடயங்களையும் கடந்து மனிதனை இணைக்கக் கூடிய ஒரு கொள்கையும் அதை ஒட்டிய செயல்பாடும்தான் நமது அடிப்படைத் தேவை.
= நியாயத்தையும் அநியாயத்தையும் தெளிவாக பிரித்தறிவித்து நியாயத்தை நிலைநாட்டக் கூடியதாகவும் அநியாயத்தைத் தடுக்கக்கூடியதாகவும் அக்கொள்கை இருக்கவேண்டும்.
= தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கக் கூடியதாகவும் அதை பேணக்கூடிய விதத்தில் மனிதனை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். நியாயத்தை ஏவி அநியாயத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்போது மனிதன் சந்திக்கக்கூடிய தோய்வில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் எதிர்ப்புகளில் இருந்தும் அவனை நிலைகுலைய விடாமல் காப்பாற்றுவதாக அக்கொள்கை அமையவேண்டும்.
= நியாயத்தை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவோர் அதில் உறுதிகுலையாமல் இருக்க தெளிவாக இலக்குகளை நிர்ணயித்து அவற்றை எளிமையான வன்முறைகள் இல்லாத வழிகளில் அடைவதற்கான வழிமுறைகளை கற்றுத் தருவதாக இருக்கவேண்டும்.
= வெற்றியின்போதும் தோல்வியின்போதும் தோய்வடையாது தொண்டர்களை வழிநடத்துவதாக அது இருக்கவேண்டும்.
அநீதிகளுக்கு எதிராக களமாடிக் கொண்டிருக்கும் இயக்கம்
மேற்கூறப்பட்ட எல்லா தன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு தெளிவான வாழ்வியல் கொள்கைதான் இஸ்லாம் என்பது. உலகெங்கும் மக்களை அவர்களின் இனம்இடம்மொழி நிறம் என்ற வேற்றுமைகளைக் கடந்து அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி வருவதை நீங்கள் அறிவீர்கள். இக்கொள்கையை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்கள் உலகில் நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
= இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (திருக்குர்ஆன் 3:110)
இதன் காரணமாக அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான மாபெரும் மக்கள் இயக்கமாக இஸ்லாம் உருவெடுக்கிறது.
(தொடரும்)



No comments:

Post a Comment