என் கேள்விக்கென்ன பதில்?
(1) விதி இருக்கிறது என்றும்
இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ் நாடிய படியால் எல்லாம் நிகழ்கிறது:
2) ஒவ்வொரு மனிதனும் தனது
செயலுக்கு தானே பொறுப்பாளி எனவும் கூறுகிறது
=> இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண் என்று தோன்றுகிறது” ஆகவே அல்லாஹ் எனக்கு
ஏற்படுத்திய நஷ்டத்திற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்? என்று
கிருஸ்துவ அன்பர ஒருவர் கேட்கிறார். இவருக்கு எப்படி பதில் கூறுவது?
நியாஸ் அஹமது பெங்களூர்
ஒரு திரைப்படம்..... அதன் கதை, திரைக்கதை,
வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு என அனைத்துமே
திருவாளர் எக்ஸ்தான். அந்தப் படத்தை இன்று தான் ரிலீஸ் செய்ய உள்ளார்..... அவர்
கையில் அதோ அப்படத்தின் டிவிடி....
அவருக்கு அலாதியான ஞாபகசக்தி. படத்தைப்
பொருத்தவரை எந்த செகண்டில் என்ன நடக்கும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி...
இப்போது திரையரங்கில் முதல் முறையாக அப்படத்தின் அரங்கேற்றம்! ரசிகர்களின் ரசிப்பை
கவனிக்க அவரும் அங்கு வந்துள்ளார்.
அதோ அடுத்த இருக்கையில் உங்களோடு அமர்ந்து
கொண்டு அவரும் அத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவர்தான்
தயாரிப்பாளர் என்று உங்களுக்குத் தெரியாது. திரைப்படத்தில் அவ்வப்போது வெவ்வேறு காட்சிகளில் நடக்கும் அநியாயங்களைப்
பார்த்துவிட்டு உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது. ஆனால் அவருக்கோ அப்படியொன்றும்
நடப்பதில்லை. அவர் சாந்தமாக இருக்கிறார். புன்முறுவல் பூக்கிறார். அது உங்கள்
இரத்தக்கொதிப்பை தலைகேற்றுகிறது......”என்னா மனுஷன்யா நீ.. உனக்கு சொரணையே
இல்லையா?” என்று சொல்லி அவரை அடிக்கப் போகிறீர்கள்...
அதற்குள் உங்கள் நண்பர் ஒருவர் ஓடி வந்து “
டேய் அவருதாண்டா எக்ஸ்...இந்தப் படத்தின் தயாரிப்பாளர்....: என்று தடுக்கிறார்.
அதைக் கேட்ட மாத்திரத்திலேயே நீங்கள் உங்கள்
தவறை உணர்கிறீர்கள்... சமநிலைக்குத் திரும்பிவிடுகிறீர்கள்... படத்தை முழுவதுமாகப்
பார்த்தபின் அவர் ஏன் சிரித்தார் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்! உங்கள்
நடத்தைக்காக வருந்துகிறீர்கள்.
இந்த உதாரணம் ஒரே சம்பவத்தைக் ஒரே நேரத்தில்
கண்டு கொண்டிருக்கும் இரு மனிதர்களின் நடத்தையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நிகழ்காலத்தை மட்டும் உணரக் கூடிய ஒரு மனிதனுக்கும் எதிர்காலத்தைப் பற்றி அறிந்த
ஒரு மனிதனுக்கும் இடையில் உள்ள அறிவு வித்தியாசம் தான் இதற்குக்காரணம். இதுபோன்ற
சில சம்பவங்களை திருக்குர்ஆனில் காணலாம்:
இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் அவரை விட அறிவு
ஞானம் கொடுக்கப்பட்டவரான கிள்ர்(அலை) அவர்களை சந்திக்கும் சம்பவம் பற்றி
திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 18:65 முதல் 18: 82 வரையிலான வசனங்கள்)
அங்கு கிள்ர் (அலை) அவர்களுக்குக்
கொடுக்கப்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய அறிவின் காரணமாக அவர் செய்யும் செயல்களைப்
பார்க்கும் மூஸா (அலை) அவர்களால் பொறுமை காக்க முடிவதில்லை என்பதை காணலாம்.
நிகழ்காலத்தை மட்டும் உணரும் ஒருவரும் எதிர்காலத்தைப் பற்றிய அறிவை வழங்கப்பட்ட
ஒருவரும் ஒரே சம்பவங்களுக்கு எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்பதை நமக்கு இறைவன்
எடுத்துக்காட்டுகிறான்.
இவையெல்லாம் மனிதர்களுக்குள் ஏற்படும் அறிவு
வித்தியாசத்தின் உதாரணங்கள். இப்போது மனித அறிவையும் இறை அறிவையும் நினைத்துப்
பாருங்கள். அணுவை விடச் சிறிய ஒன்றைக் கொண்டு உலகைவிடப் பெரிய ஒன்றை ஆராயும்போது ஏற்படும்
குழப்பத்தின் விளைவுகளே விதி தொடர்பாக வரும் சந்தேகங்கள். நமது அறிவு அல்டிமேட்
அல்ல என்பதையும் அனைத்தையும் புரிந்துகொள்ளக் கூடியது அல்ல என்பதையும் நாம்
ஒப்புக்கொண்டேயாக வேண்டும். நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களிலும் சரி எட்டும்
விஷயங்களிலும் சரி நம்மைப் படைத்தவன் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ
அதுமட்டுமே நூறு சதவீதம் உண்மை.
இப்போது திருவாளர் எக்ஸின் உதாரணத்திற்கு
வருவோம். உங்களுக்கு அருகில் அவர் இயக்கித் தயாரித்த அப்படத்தை
பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் ரியாக்ஷன்களைப் பார்க்கிறார் அவர். உங்கள்
டென்ஷன் அதிகமாகி நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறதை அவர் பார்க்கிறார். நிலைமை மேலும் மோசமாகாமல் இருப்பதற்காக உங்களை
சமாதானப்படுத்தும் விதமாக கதையின் அடுத்த காட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை அல்லது படத்தின் இறுதி முடிவைப் பற்றி
உங்களுக்கு கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இதைப் போலத்தான் விதி பற்றி நமக்கு நம் நன்மை
கருதி இறைவன் அறிவிக்கும் விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை நம்மால்
நம் சிற்றறிவைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது என்பது. திண்ணம்
“இந்தப்
பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும்
அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது
அல்லாஹ்வுக்கு எளிதானது.உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல்
இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில்
நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியைப் பற்றி அறிவிக்கிறான்) கர்வமும் பெருமையும் கொண்ட
ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்”. (அல்குர்ஆன் 57 : 22)
இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்....
(குறிப்பு : உதாரணத்திற்காக மட்டுமே இங்கு
திரைப்படம் பார்ப்பது பற்றி கூறப பட்டுள்ளது. இதை ஒரு அங்கீகாரமாக யாரும் எடுத்துக்கொள்ள
வேண்டாம். அந்நிய ஆண் பெண்கள் பரஸ்பரம் பார்த்து ரசிப்பது இஸ்லாத்தில்
தடுக்கப்பட்ட ஒன்று என்பது வேறு விடயம்.)
என்
கேள்விக்கென்ன பதில்?
(1) விதி
இருக்கிறது என்றும் இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ் நாடிய படியால் எல்லாம் நிகழ்கிறது:
2) ஒவ்வொரு
மனிதனும் தனது செயலுக்கு தானே பொறுப்பாளி எனவும் கூறுகிறது
=> இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண் என்று தோன்றுகிறது” ஆகவே அல்லாஹ் எனக்கு
ஏற்படுத்திய நஷ்டத்திற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்? என்று
கிருஸ்துவ அன்பர ஒருவர் கேட்கிறார். இவருக்கு எப்படி பதில் கூறுவது?
நியாஸ்
அஹமது பெங்களூர்
பதில்
தொடர்ச்சி....
“இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம்
உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு
எளிதானது.உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல்
இருப்பதற்காகவும், (விதியைப் பற்றி அறிவிக்கிறான்) கர்வமும் பெருமையும் கொண்ட
ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்”. (அல்குர்ஆன் 57 : 22)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்
என்று பொருள்)
சர்வவல்லமை கொண்டவனும் அனைத்தையும் அறிபவனும்
முக்காலத்தையும் அறிபவனும் கட்டுப்படுத்துபவனும் ஆகிய இறைவனின் அறிவு என்பது நம்
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பிரம்மாண்டமானது. அப்படிப்பட்ட அறிவில் இருந்து
அவன் நம் நன்மை கருதி நமக்கு அறிவித்துத்
தரும் ஒரு சில விடயங்கள் தான் விதி பற்றி நமக்கு வரும் தகவல்கள்.
அல்லாஹ்வின் அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. முக்காலங்களையும்
தழுவியது. அளவில்லாதது. அவன் தனது அறிவிலிருந்து மனிதனுக்கு எவ்வளவு தேவையோ
அதைத்தான் அவ்வப்போது ரிலீஸ் செய்கிறான்.
2:255. .... அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்
இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த
வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது....
அவன் அளித்த இந்த சிற்றிவைக் கொண்டுக் கொண்டு அவனது
அறிவையும் திட்டங்களையும் அளக்கமுடியாது. அவன் எதை நமக்கு அறிவித்துக்
கொடுக்கிறானோ அவ்வளவு மட்டுமே நமது எல்லை. என்பதை முதலில் நாம் புரிந்து
கொள்ளவேண்டும். அதாவது நாம் சென்ற இதழில் சொன்ன உதாரணத்தைப் போல இறைவனை பொருத்தவரை
இவ்வுலகில் நடப்பவை ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட திரைப்படம் போன்றது. அது பதிவு
செய்யப்பட டிவிடியில் என்ன உள்ளது என்பதை அவன் முழுமையாக அறிவான். நம்மைப் பொறுத்தவரை
அதில் நடித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் போன்றவர்கள். ஆனால் நமக்கு அடுத்த
வினாடி என்ன நடக்கும் என்பதை கிஞ்சிற்றும் அறியமுடியாது. ஆனால் அதில் பதிவானபடி
நாம் நடித்துக் கொண்டிருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் விருப்ப உரிமை உள்ளதை
மறுக்க முடியுமா?
அடுத்ததாக விதி என்று எதைக் கூறுகிறோம்? அதைப்
புரிந்துகொள்ள கீழ்காணும் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள்.
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி
செய்யும் தொழிற்ச்சாலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில்
பல டிபார்ட்மெண்ட்களும்
செக்சன்களும் அதிகாரிகளும் கீழ்நிலையில் இருந்து மேல்நிலைவரை பல தொழிலாளர்களும் இயந்திரங்களும் கணிப்பொறிகளும் உபகரணங்களும் கருவிகளும் உள்ளன. உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குத் தேவையான மூலப்பொருட்களும் உபரி பாகங்களும் இன்னபிற அனைத்தும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் அங்கு யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எதை எதனோடு பொருத்துவது, எப்பொருளை எவ்வளவு மற்றும் எந்த விகிதப் படி தயாரிக்கவேண்டும் என்பது பற்றியோ எந்த கட்டளைகளும் இன்னும் வரவில்லை. அப்படியானால் அங்கு எந்த உற்பத்தியாவது நடக்குமா? யோசித்துப் பாருங்கள்.

வேறு ஒரு உதாரணம்....
இட்லிக்கு சட்னி தயாரிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்கான
திட்டம் தீட்டப்பட வேண்டும். தேவையான கருவிகளும் மூலப்பொருட்களும் சேகரிக்கப்பட
வேண்டும். தேங்காய், பொட்டுக்கடலை
மிளகாய், உப்பு இவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் சேகரித்த பிறகு சேர்த்து
குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பதத்தில் அரைத்து எடுக்க வேண்டும் எல்லாவற்றுக்கும்
மேலாக இத்திட்டத்தை தீட்டவும் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்த ஒருவன் இருக்க
வேண்டும். அவனுக்கு அந்த திட்டத்தை செயல்படுத்த ஈடுபடும் இருக்க வேண்டும். அப்போதுதான்
சட்னி என்பது உண்டாகும்.
இவ்வாறு மனித வாழ்விலேயே
சிறிதும் பெரிதுமான எந்த ஒரு இயக்கத்துக்கும் உற்பத்திக்கும் சம்பந்தப்பட்ட
பொருட்கள் எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதிகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே அது
சாத்தியமாவதைப் பார்க்கிறோம்.
அதுபோலவே இயற்கையில் நாம்
காணும் நுண்ணிய அணுக்கள் முதல் அண்டசராசரங்களின் இயக்கம் ஆயினும் சரி மனிதனின்
உடலில் சிறு செல்கள் முதல் மற்ற முக்கிய உறுப்புக்கள் வரை அவை இயங்க வேண்டுமானால்
அவற்றுக்குத் தெளிவான நிலையான உரிய
அதிபக்குவமான திட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டு வழிகட்டுதல்களாகவும்
கட்டளைகளாகவும் செலுத்தப்பட வேண்டும். இவ்வுலகும் அதிலுள்ளவையும் சீராக இயங்கி
வருவதில் அதைத்தான் நாம் காண்கிறோம். இவற்றைப் படைத்தவனே அதைத் தன் திருமறையில்
இவ்வாறு கூறுகிறான்.
87:2 .அவனே படைத்தான், ஒழுங்குற அமைத்தான்
87:3 மேலும் அவனே நிர்ணயித்தான், வழிகாட்டினான்
ஆக, இவ்வுலகம்
இயங்க விதி தேவை என்று என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
(பதில்
தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
என்
கேள்விக்கென்ன பதில்?
(1) விதி
இருக்கிறது என்றும் இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ் நாடிய படியால் எல்லாம் நிகழ்கிறது:
2) ஒவ்வொரு
மனிதனும் தனது செயலுக்கு தானே பொறுப்பாளி எனவும் கூறுகிறது
=> இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண் என்று தோன்றுகிறது” ஆகவே அல்லாஹ் எனக்கு
ஏற்படுத்திய நஷ்டத்திற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்? என்று
கிருஸ்துவ அன்பர ஒருவர் கேட்கிறார். இவருக்கு எப்படி பதில் கூறுவது?
நியாஸ்
அஹமது பெங்களூர்
ஒவ்வொரு
படைப்பினங்களும் அவை நுண் அணுக்களாயினும் சரி
அவற்றின் கூட்டுப் பொருட்களாயினும் சரி உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே
அவை சந்திக்கக்கூடிய நேர்மறையான அல்லது எதிர்மறையான சூழ்நிலைகளில் எவ்வாறு அவற்றை
எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளையும் தாங்கியே வருகின்றன. இன்றைய கணிப்பொறி யுகத்தில் இக்கட்டளைகளைப்
பற்றி புரிந்து கொள்வது எளிது. அதன் மென்பொருள் எப்படியோ அவை அவ்வாறு அந்த
சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன.
உதாரணமாக ஒரு
மிளகாய் விதையை எடுத்துக்கொள்ளுங்கள். அது மண்ணில் விதைக்கப்பட்டால் அதிலிருந்து
வளரக்கூடிய மிளகாய்ச் செடியின் தண்டு, கிளைகள், இலைகள் ஆகிய ஒவ்வொரு உறுப்புகளின்
நீள அகலங்கள் பருமன்கள், வளர்ச்சி, குறித்த நுணுக்கமான குறிப்புகளும் கட்டளைகளும்
அனைத்தும் புதைந்து கிடப்பதை நாம் அறிகிறோம். இவை அனைத்தையும் எழுதியவன் அவற்றை
அறிய மாட்டானா?
மனிதனையும்
ஜின்களையும் பொருத்தவரை அவர்களுக்கு இவ்வுலகு என்பது பரீட்சை என்பதால் சுய
விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதைத் தேர்ந்து எடுப்பார்கள்
என்பதும் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் அதன் பின்னர் நடக்கப்போகின்ற அனைத்தையும்
மிகமிகக் கச்சிதமாக இறைவனுக்குத் தெரியும். அது அவனது அறிவில் பதிவான ஒன்று.
அதிலிருந்து சில இரகசியங்களைத்தான் மனிதன் பயன்பெறும் பொருட்டு தன் திருத்தூதர்
மூலமாகவும் வேதம் மூலமாகவும் அவனுக்கு அறிவித்துக் கொடுத்திருக்கிறான்.
மனிதனைப் பொறுத்தவரை அவன் நிகழ்காலத்தை மட்டுமே
அறியக்கூடியவனாக படைக்கப்பட்டுள்ளான். அவனைப் பொறுத்தவரை பல கட்டங்களைக் கடந்து
எதிர்காலத்தை அடையும்போது மட்டுமே அங்கு நடப்பவற்றை அறியமுடியும். ஆனால் இறைவனைப்
பொறுத்தவரை அப்படியா? அவனைப் பொறுத்தவரை
இங்கு உலகில் நடந்தது, நடப்பது மற்றும் நடக்கப்போவது அனைத்தும் ஒரு பதிவு
செய்யப்பட்ட டிவிடி போல. அதன் அனைத்து நிகழ்வுகளையும் மிகமிக நுணுக்கமாக அறிந்தவன்
அவன்.
மனிதன்
அவனுக்கு வழங்கப்பட்ட குறைவான அறிவைக் கொண்டு அதை முழுமையாகப் புரிந்து கொள்ள
முற்படுவது தோல்வியையே தரும் என்பது தெளிவு.. தனக்கு வழங்கப்பட்டது மிகமிகக்
குறைவான அறிவு என்பதை அறிந்துக்கொண்டே அந்த அளவிடமுடியாத அறிவாற்றலின் திட்டங்களை
எடைபோடுவதும் அவற்றில் எதைப்பற்றியும் இது சரி என்றும் இது தவறு என்று
தரம்பிரிப்பதும் சரியா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த தற்காலிக
உலகில் நாம் ஒவ்வொருவரும் நமக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம் என்பதும்
இது ஒரு பரீட்சைக் கூடம் மாதிரி என்பதும். இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும்
இவ்வுலகில் இறைவன் ஒரு பரீட்சையை நடத்திக் கொண்டு இருக்கிறான் அந்த பரீட்சைக்கான
தற்காலிக செட் அப் தான் நம் அறிவுக்கு எட்டிய இவ்வுலகம்.
67:2. உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று
சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை
யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன்.
18:7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது
அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே.
18:8. (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை
அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம்.
விதியைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள
கீழ்கண்ட விஷயங்களையும் நாம் புரிந்து கொள்வது நலம்.
இறைவன் என் பரீட்சிக்க வேண்டும்?
இறைவன் மனிதனை என் பரீட்சித்துப்
பார்க்கவேண்டும்? எதற்காக சொர்க்கம், நரகம்? கருணையுள்ள இறைவன் மனிதனை நரகில்
நெருப்பிலிட்டு வேதனை செய்யவேண்டும்? நேரடியாக சொர்க்கத்திலேயே மனிதனை
வாழவைக்கலாமே?
“இறைவன் இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சைக்களமாக
அமைத்திருக்கிறான். இந்தப் பரீட்சையில்
யார் அவனுக்குக் கீழ்படிந்து தங்கள் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்கின்றார்களோ
அவர்களுக்குப் பரிசாக சொர்க்கத்தை அவன் வழங்க உள்ளான்.
யார் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்களோ
அவர்களுக்கு நரகத்தை தண்டனையாக வழங்கவுள்ளான்.” என்றெல்லாம்
இறைத்தூதர்கள் போதிக்கும் போது கீழ்கண்ட சந்தேகங்கள் மனிதர்களிடம் எழுவதைப்
பார்க்கலாம்
?- இறைவன் ஏன்
பரீட்சிக்க வேண்டும்? அனைத்தையும் – குறிப்பாக முக்காலத்தையும் - அறியக்கூடிய
அவன் நேரடியாகவே மனிதனை சொர்கத்திலோ
அல்லது நரகத்திலோ போடலாமே?
= உங்களை அப்படி
நரகத்தில் நேரடியாகப் போட்டால் என்ன செய்வீர்கள்? எதற்காக என்னை தண்டிக்கிறாய்?
நான் என்ன செய்தேன் என்று கேட்பீர்களா இல்லையா?
?- சரி, எதற்கு
நரகம்? எதற்கு ஒரு பரீட்சை? நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறானா?
=
அப்படிப்பட்டவனாக இருந்தால் அவன் அனைவரையும் நேரடியாக நரகத்துக்கு அனுப்பி இருப்பானே? அப்போதும் அவனை
யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.
?- நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் இறைவனுக்கு
என்ன நஷ்டம்?
= அவன் நம்மை
நரகத்தில் போட்டாலும் சொர்க்கத்தில் போட்டாலும் அவனைத் திருப்பிக் கேட்க முடியாது.
நமக்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்க வேண்டிய அவசியமும் அவனுக்குக் கிடையாது. ஆனால்
இறைவன் மிகக் கருணையாளன். நம்மைப் – அதாவது முதல் மனிதரையும் அவரது மனைவியையும் –
படைத்ததன் பின்னர் அவர்களை சொர்க்கத்தில்தான் குடியமர்த்தினான். ஆனால்
சொர்க்கத்தின் அருமையை அதன் விலைமதிப்பை உணராத அவர்கள் சில தவறுகளை செய்தார்கள்.
அதன் காரணமாக இறைவன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான். பசித்தவனுக்குத்தான்
உணவின் அருமையும் தாகம் உள்ளவனுக்குத்தான் நீரின் அருமையும் தெரியும். வெயிலில்
சென்று வந்தவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியும். எனவே சொர்க்கத்தை இலவசமாகக்
கொடுக்காமல் அதை சிறிது கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பொருளாக அவன்
ஆக்கிவிட்டான்.
சொர்க்கத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட நமது ஆதி தந்தையும் தாயும் நாம் இன்று வாழும் பூமிக்கு அனுப்பப்
பட்டார்கள். இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதை சுருக்கமாகக்
காண்போம்:
சொர்க்கத்தில்
இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின்
தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ
மன்னிப்பு கோரினர்.
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில
வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன்
மன்னித்தான்; அவன் மன்னிப்பை
ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.7:24-25: ''(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' என்று கூறினான். ''அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான்.
2:38. ''இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி
வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும்
மாட்டார்கள்'' என்று கூறினோம்.
2:39. ''(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)
இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான
வரலாறு!
= இங்கு
நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு
வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி மட்டும் இருந்து அதற்கு எதிரான
ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான்
என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி
மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளான். யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ
அவன் தூண்டும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி
அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.
ஆக, இந்த
பரீட்சைக் களத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பரீட்சையை முடிப்பதற்கு ஒரு
குறிப்பிட்ட கெடு நிச்சயிக்கப் பட்டுள்ளது. அநீதி, அக்கிரமங்கள் நடப்பதற்கும்
இதுதான் இடம். அவற்றை எதிர்த்துப் போராட வாய்ப்பளிப்பதற்கும் இதுதான் இடம்! இங்கு
இறைவன் அதர்மத்தை சிலவேளைகளில் நல்லோர்களின் கரங்கள் கொண்டு அழிக்கிறான்.
சிலவேளைகளில் தனது தண்டனைகளான இயற்கை சீற்றங்களைக் கொண்டு அழிக்கிறான். எதை
எப்போது எப்படி அழிப்பது என்பது அவன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ்
தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த
உயினத்தையும் அவன்
விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான்.
அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்.முந்தவும்
மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:61)
10:11. நன்மையை
அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த)
மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரையில்) நிச்சயமாக அவர்களுடைய
காலம் முடிவு பெற்றேயிருக்கும். எனினும், (மறுமையில்) நம்மைச் சந்திக்க
வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களையும் அவர்களுடைய
வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு
வைக்கிறோம்.
‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று
கொல்லும்’ என்கிறது பழமொழி. தெய்வமும் அன்றே கொன்றால் என்னவாகும்? –
யோசித்தீர்களா?
இப்பரீட்சையை எப்படி நடத்த வேண்டும் என்பதை
அதிபக்குவமாக அறிந்தவனும் முழுக்க முழுக்க அதைத் தீர்மானிப்பவனும் அவன் மட்டுமே.
அதன் சூட்சுமங்களை நம்மால் விளங்கவும் முடியாது. இப்பரீட்சைக்கு ஒரு மாற்று
ஏற்பாட்டை நம்மால் பரிந்துரைக்கவும் முடியாது, அதற்கான அதிகாரமும் அதற்கேற்ற
அறிவும் நமக்கு துளியும் கிடையாது. ‘அது ஏன் அப்படி,? அல்லது இப்படி?’ ‘அது
அவ்வாறு அல்லது இவ்வாறு இருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்றெல்லாம் அந்த
சர்வவல்லமை கொண்ட பேரறிவாளன் செய்துள்ள
ஏற்பாடுகளைப் பற்றி இந்த சிற்றரிவாளர்கள் கூறுவது இவர்களின் அப்பட்டமான
அறியாமையின் வெளிப்பாடுகளே என்பதும் வெற்று உளறல்களே என்பதை பொறுமையாக
சிந்திப்போர் அறியலாம்.
இப்பரீட்சையில் யாரை எப்படி பரீட்சிப்பது,
யாருக்கு எந்த சூழ்நிலையைக் கொடுப்பது, யாரை யாருக்கு எதிரியாக நிறுத்துவது,
யாருக்கு எவ்வளவு கால அவகாசம் கொடுப்பது, யாருக்கு யார் மீது ஆதிக்கம் கொடுப்பது
யாருக்கு எவ்வளவு
= விதி எழுதப் படாவிட்டால்......?
உதாரணமாக
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில்
பல டிபார்ட்மெண்ட்களும்
செக்சன்களும் அதிகாரிகளும் கீழ்நிலையில் இருந்து மேல்நிலைவரை பல தொழிலாளர்களும் இயந்திரங்களும் கணிப்பொறிகளும் உபகரணங்களும் கருவிகளும் உள்ளன. உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குத் தேவையான மூலப்பொருட்களும் உபரி பாகங்களும் இன்னபிற அனைத்தும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் அங்கு யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எதை எதனோடு பொருத்துவது, எப்பொருளை எவ்வளவு மற்றும் எந்த விகிதப் படி தயாரிக்கவேண்டும் என்பது பற்றியோ எந்த கட்டளைகளும் இன்னும் வரவில்லை. அப்படியானால் அங்கு எந்த உற்பத்தியாவது நடக்குமா? யோசித்துப் பாருங்கள்.
செக்சன்களும் அதிகாரிகளும் கீழ்நிலையில் இருந்து மேல்நிலைவரை பல தொழிலாளர்களும் இயந்திரங்களும் கணிப்பொறிகளும் உபகரணங்களும் கருவிகளும் உள்ளன. உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குத் தேவையான மூலப்பொருட்களும் உபரி பாகங்களும் இன்னபிற அனைத்தும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் அங்கு யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எதை எதனோடு பொருத்துவது, எப்பொருளை எவ்வளவு மற்றும் எந்த விகிதப் படி தயாரிக்கவேண்டும் என்பது பற்றியோ எந்த கட்டளைகளும் இன்னும் வரவில்லை. அப்படியானால் அங்கு எந்த உற்பத்தியாவது நடக்குமா? யோசித்துப் பாருங்கள்.
வேறு ஒரு
உதாரணம்.... இட்லிக்கு சட்னி தயாரிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் அதற்கான திட்டம் தீட்டப் பட வேண்டும். தேவையான கருவிகளும்
மூலப்பொருட்களும் சேகரிக்கப்பட வேண்டும்.
தேங்காய், பொட்டுக்கடலை மிளகாய், உப்பு இவற்றை குறிப்பிட்ட விகிதத்தில்
சேகரித்த பிறகு சேர்த்து குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பதத்தில் அரைத்து எடுக்க
வேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக இத்திட்டத்தை தீட்டவும் செயல்படுத்தவும் ஆற்றல்
படைத்த ஒருவன் இருக்க வேண்டும். அவனுக்கு அந்த திட்டத்தை செயல்படுத்த ஈடுபடும்
இருக்க வேண்டும். அப்போதுதான் சட்னி என்பது உண்டாகும்.
இவ்வாறு மனித
வாழ்விலேயே சிறிதும் பெரிதுமான எந்த ஒரு இயக்கத்துக்கும் உற்பத்திக்கும்
சம்பந்தப்பட்ட பொருட்கள் எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதிகளுக்குக்
கட்டுப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாவதைப் பார்க்கிறோம்.
அதுபோலவே
இயற்கையில் நாம் காணும் நுண்ணிய அணுக்கள் முதல் அண்டசராசரங்களின் இயக்கம் ஆயினும்
சரி. மனித மனிதனின் உடலில் சிறு செல்கள் முதல் மற்ற முக்கிய உறுப்புக்கள் வரை அவை
இயங்க வேண்டுமானால் அவற்றுக்குத் தெளிவான நிலையான உரிய அதிபக்குவமான திட்டங்களும் சட்டங்களும்
வகுக்கப்பட்டு வழிகட்டுதல்களாகவும் கட்டளைகளாகவும் செலுத்தப் பட வேண்டும்.
இவ்வுலகும் அதிலுள்ளவையும் சீராக இயங்கி வருவதில் அதைத்தான் நாம் காண்கிறோம்.
இவற்றைப் படைத்தவனே அதைத் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
87:2 .அவனே படைத்தான், ஒழுங்குற அமைத்தான்
87:3 மேலும் அவனே நிர்ணயித்தான், வழிகாட்டினான்
ஒவ்வொரு
படைப்பினங்களும் அவை நுண் அணுக்களாயினும் சரி
அவற்றின் கூட்டுப் பொருட்களாயினும் சரி உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே
அவை சந்திக்கக்கூடிய நேர்மறையான அல்லது எதிர்மறையான சூழ்நிலைகளில் எவ்வாறு அவற்றை
எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளையும் தாங்கியே வருகின்றன. இன்றைய கணிப்பொறி யுகத்தில் இக்கட்டளைகளைப்
பற்றி புரிந்து கொள்வது எளிது. அதன் மென்பொருள் எப்படியோ அவை அவ்வாறு அந்த
சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன.
மனிதனையும்
ஜின்களையும் பொருத்தவரை அவர்களுக்கு இவ்வுலகு என்பது பரீட்சை என்பதால் சுய
விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதைத் தேர்ந்து எடுப்பார்கள்
என்பதும் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் அதன் பின்னர் நடக்கப்போகின்ற
அனைத்தையும் அதிகச்சிதமாக இறைவனுக்குத் தெரியும். அது அவனது அறிவில் பதிவான ஒன்று.
அதிலிருந்து சில இரகசியங்களைத்தான் மனிதன் பயன்பெறும் பொருட்டு தன் திருத்தூதர்
மூலமாகவும் வேதம் மூலமாகவும் அவனுக்கு அறிவித்துக் கொடுத்திருக்கிறான்.
மனிதனைப் பொருத்தவரை அவன் நிகழ்காலத்தை மட்டுமே
அறியக்கூடியவனாக படைக்கப்பட்டுள்ளான். அவனைப் பொறுத்தவரை பல கட்டங்களைக் கடந்து
எதிர்காலத்தை அடையும்போது மட்டுமே அங்கு நடப்பவற்றை அறியமுடியும். ஆனால் இறைவனைப்
பொறுத்தவரை அப்படியா? அவனைப் பொறுத்தவரை
இங்கு உலகில் நடந்தது, நடப்பது மற்றும் நடக்கப்போவது அனைத்தும் ஒரு பதிவு
செய்யப்பட்ட டிவிடி போல. அதன் அனைத்து நிகழ்வுகளையும் மிகமிக நுணுக்கமாக அறிந்தவன்
அவன்.
மனிதன்
அவனுக்கு வழங்கப்பட்ட குறைவான அறிவைக் கொண்டு அதை முழுமையாகப் புரிந்து கொள்ள
முற்படுவது தோல்வியையே தரும் என்பது தெளிவு.. தனக்கு வழங்கப்பட்டது மிகமிகக்
குறைவான அறிவு என்பதை அறிந்துக்கொண்டே அந்த அளவிடமுடியாத அறிவாற்றலின் திட்டங்களை
எடைபோடுவதும் அவற்றில் எதைப்பற்றியும் இது சரி என்றும் இது தவறு என்று
தரம்பிரிப்பதும் சரியா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
சரி, எந்த
அடிப்படையில் ஒரு விஷயத்தை சரி, அல்லது
தவறு என்றோ நியாயம் அல்லது அநியாயம் என்றோ தீர்மானிக்கிறீர்கள்? எதையாவது தரம்
பிரிப்பதற்கு முன்னால் உங்கள் அளவுகோலைப் பற்றி சற்று சிந்தித்துப்பாருங்கள். அந்த
அளவுகோலை எங்கிருந்து பெறுகிறீர்கள்.
= ஓரு
வாதத்திற்காக ஒவ்வொருவரின் விதியும் அவரவருக்கு தெரியும் என்று
வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் இறக்கப்போகும் ஒரு மனிதனுக்கு தனது விதி
தெரியும் என்றால் என்ன நடக்கும்? நாளை
விபத்தொன்றில் சிக்கப்போகும் ஒருவனின் விதி அவனுக்கு தெரியும் என்றால் அவனது
நிலையை சிந்தித்துப் பாருங்கள். விதி தெரிந்த எந்தவொரு மனிதனாலும் நிம்மதியாக வாழ
முடியாது. உலகம் சீராக இயங்கவேண்டும் என்பதற்காகக் கூட விதியை அல்லாஹ் மறைத்து
வைத்திருக்கலாம்( அல்லாஹ் மிக அறிந்தவன்)
= எனவே இவர்களின்;; கேள்விக்கு நபிகளாரின் பதிலையே நமது பதிலாகத் தருகிறோம்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், தீயோர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு (இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
ஆறிவிப்பவர்- அலீ(ரலி) அறிவித்தார்.
நூல் - புகாரி 6605
No comments:
Post a Comment