தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான்.
அருள்மறை வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இறைகட்டளைக்கு மாற்றமாக அசைவம் உண்பதைத் தடுத்தால் என்ன நிகழும்?
கால்நடைகள் பெருகும்
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. அவ்வாறு பெருகினால் மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் வேகமாக அழியும்..... தொடர்ந்து மழை பொழிவது நின்றுவிடும்.... கட்டுக்கடங்காத வறட்சி பெருகும்..... தொடர்ந்து பூமி வாழ்வு தடைபடும்.
மாமிசம் மனிதனுக்குத் தேவை
மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. உடல் உழைப்பு இல்லாதோருக்கு சைவமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் கடின உடல் உழைப்பு செய்யும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அசைவம் கட்டாயம் தேவைப் படுகிறது. மேலும் துருவப் பிரதேசங்களிளும் கடலோரங்களிலும் வாழ்வோரிடம் சைவத்தைத் திணிக்க முடியாது.
மனித உடலமைப்பு
மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.
மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.
சைவமும் உயிர்களைக் கொல்கிறதே!
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.
36:71-73 “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா? அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?”

No comments:
Post a Comment