Tuesday, July 15, 2014

நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா ?

நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா ?
நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ?

ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி நமது உணமையான இறைவன் யார் ? என்ற இந்த சிறிய கட்டுரையை திறந்த மனதுடன் பொறுமையாக சிந்தித்து சீர்தூக்கி பார்த்து படிக்கவும் 

நாம் வணங்கும் இறைவன் உண்மையா அல்லது பொய்யா என்று தெரிந்து கொள்வோம்படித்துவிட்டு நீங்களே திறந்த மனதுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே! நாம்  சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா என்று பதில் சொல்லுங்கள்! நமக்கு நாமே சாட்சி பகருவோம் ஏன் இனிய நண்பர்களே

யார் உண்மையான இறைவன்: 
WHO IS OUR TRUE GOD FOR THIS WORLD?

SIVAN MURUGAN GANESH VISHNU KRISHNAN RAAMAN VENKATESHWARAN? OR
BUDDHA OR 
JESUS HOLY SPRIT MARY? OR 
FIRE OR SUN OR MOON OR STAR OR
ALLAH OR 
GOD?

இந்த உலகத்தையும் நம்மையும் படைத்த கடவுள் ஒருவனா அல்லது இருவனா அல்லது மூவரா அல்லது அதற்கு மேலா ?

இந்த உலகத்தையும் நம்மையும் படைத்த கடவுள் மனிதனா அல்லது இறைவனா?

நம் அனைவருக்கும் தெரியும்ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் இந்த உலகம் சீராக இயங்க முடியாது. 
ஒரு நாட்டுக்கு ஒரு பிரதம அமைச்சர் (PRIME MINISTER) தான் இருக்கிறார்
ஒரு மாநிலத்துக்கு ஒரு முதல் அமைச்சர் (CHIEF MINISTER) தான் இருக்கிறார்
ஒரு கல்லூரிக்கு ஒரு முதல்வர் (PRINCIPAL) தான்
ஒரு அலுவலகத்துக்கு ஒரு முதன்மை அதிகாரி (CEO) தான் இருக்கிறார்

அப்ப இந்த உலகத்துக்கும் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியும்
Logically Practically Theoretically ஒரே ஒரு இறைவன் தான் இருக்க முடியும். அப்போது தான் இந்த உலகம் அமைதியாக சீராக இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருந்தால் கடவுள்களுக்கு மத்தியில் சண்டை நடக்கும். அப்ப 

இறைவன் ஒருவன் என்றால்,

இறைவனுக்கு பங்குதாரர்கள் (PARTNERS) யாரும் இருக்க முடியாது.

இறைவனுக்கு தாய் தந்தை (FATHER-MOTHER) யாரும் இருக்க முடியாது. ஏன் என்றால் இறைவன் எவராலும் பெறப்படவும் இல்லை.

இறைவனுக்கு மனைவி மக்கள் (WIFE–CHILDREN) யாரும் இருக்க முடியாது. ஏன் என்றால் இறைவன் எவரையும் பெறவும் இல்லை. எவரையும் திருமணம் முடிக்கவில்லை

இறைவன் மனிதானாக இருக்க முடியாது. 

இறைத்தூதர்கள்தீர்க்கதரிசிகள்மனித அவதாரங்கள்கடவுள் அவதாரங்கள் (PROPHETS), சாமியார்கள்ரிஷிகள்மனித புனிதர்கள்,நல்லவர்கள் போன்ற மனிதர்கள் யாரும் இறைவனாக இருக்க முடியாது. 

இறைவன் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை.

இறைவனுக்கு யாரிடத்திலும் எந்த தேவையும் இல்லை. அவனுக்கு தங்கம் பணம் போன்ற காணிக்கைகள் எதுவும் தேவை இல்லைபால்தேங்காய்பழம்பூ போன்ற அபிஷேகம் எதுவும் தேவை இல்லை.

மனிதனைப் போன்று இறைவனுக்கு பசி தாகம் தூக்கம் காமம் ஓய்வு களைப்பு எதுவும் கிடையாது.

இறைவன் இறைவன் தான். அவன் ஒருவன் தான். அவனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. அவன் மனிதன் கிடையாது.

படைத்தல்காத்தல் + வளர்த்தல்அழித்தல் இம்முன்றும் ஒரே ஒரு இறைவன்அவன் தான் செய்து கொண்டு இருக்கிறான்.

இறைவனுக்கு உருவமா ? (Idol or Statue Worshiping)

இறைவனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. பார்க்காத இறைவனுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்எப்படி சிலைகளை வைத்து வணங்க முடியும்?

இந்த வானம்பூமிசூரியன்தண்ணிர்காற்றுநெருப்புஉணவுஉடைநமது உடல் உயிர் அனைத்தும் நம்மை படைத்த இறைவனுடையது. இவற்றை அனைத்தையும் படைத்த உண்மையான ஒரே இறைவனை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றை எதையும் படைக்காத இறைவன் படைத்தவைகளை மனிதன்சூரியன்நெருப்புமழை போன்றவற்றை வணங்குவது சிறந்ததா

பொய்யான இறைவனை வணங்குவது சிறந்ததாஉண்மையான ஒரே இறைவனை வணங்குவது சிறந்ததாநீங்களே சொல்லுங்கள் நண்பர்களே சிந்தியுங்கள் நண்பர்களே.

இப்போது நாம் ஹிந்துபுத்தம்கிறிஸ்துவம்இஸ்லாம் என நான்கு மதத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து யார் உண்மையான இறைவனை வணங்குகிறார்கள் என்றும் உலக மக்களின் இறைவன் யார் என்றும் சிந்தித்து சீர்தூக்கி பார்ப்போம்.

புத்த மதம், (In BUDDHISM)

முதலில் புத்த மதத்தை எடுத்து கொள்வோம்புத்தர்கள் கௌதம புத்தரை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்புத்தர் இந்தியாவில் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தந்தை பெரியாரை போன்ற மிக சிறந்த சீர்திருத்தவாதிஅன்பையும் மனிதத்தையும் போதித்தவர்கடவுளை பற்றி பேசாதவர்அவர் இறந்த பிறகுஅவரின் காலத்திற்கு பிறகுஅவரை பின்பற்றியவர்கள் புத்தர் என்ற மனிதனை கடவுளாக்கி கொண்டனர்வணங்கி வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் உண்மையான இறைவனை வணங்க வில்லைபுத்தர் என்ற மனிதனை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.

கிருஸ்துவ மதம், (In CHRISTIANITY)

இரண்டாவது கிறிஸ்துவத்தை எடுத்து கொள்வோம்அவர்கள் இயேசுவை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக அல்லது கடவுளின் ஒரு பகுதியாக (TRINITY) நினைத்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள்

இயேசுவைஇறைவன் தந்தை இல்லாமல் பிறக்க வைத்தான்இறைவன் எப்படி முதல் மனிதனை (ADAM) தாயும் தந்தையும் இல்லாமல் படைத்தானோ அது போல் இயேசுவைஇறைவன் தந்தை இல்லாமல் படைத்தான்இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி (PROPHET) என்று தான் கூறினாரே தவிர தன்னை கடவுள் என்றோ கடவுளின் மகன் என்றோ கூற வில்லைதன்னை படைத்த கர்த்தரைதான் வணங்க சொன்னார்ஆனால் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்கள் இயேசுவை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக அல்லது கடவுளின் ஒரு பகுதியாக (TRINITY) உயர்த்தி வணங்கி வழிபட்டு வருகிறார்கள்சிலை வணக்கத்தை ஒழிக்க போராடிய ஆபிரகாம்மோசேஇயேசு போன்ற தீர்க்கதரிசிகள் எதிராக இயேசுவுக்கும் அவரின் தாயார் மேரிக்கும் சிலை வைத்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் உண்மையான இறைவனை வணங்க வில்லைஇயேசு என்ற மனிதனை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.

இந்து மதம், (In HINDUISM)

மூன்றாவதாக இந்து மதத்தை எடுத்து கொள்வோம்இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பலரை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்முப்பெரும் கடவுள்குல தெய்வம்சாமியார்களை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்

இவர்கள் வணங்கும் பல கடவுள்கள் திருமண ஆனவர்கள்எல்லாருக்கும் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்குழந்தைகளை பெற்று கொண்டவர்கள்

ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் மிக பெரிய கடவுளான சிவா பெருமானை எடுத்து கொள்ளலாம்அவரின் குடும்பமே கடவுளாக மக்கள் வணங்கி வழிபட்டு வருகிறார்கள். கடவுள் சிவனுக்கு இரண்டு மனைவிகள்இரண்டு குழந்தைகள். 

இவர்களும் உண்மையான இறைவனை வணங்க வில்லைமனித அவதாரங்களை, சாமியார்களை, குல தெய்வங்களை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.

இஸ்லாம் (ISLAM)

நான்கவதாக இஸ்லாத்தை எடுத்து கொள்வோம்முஸ்லிம்கள் அல்லாஹ்வை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்,அல்லாஹ் என்றால் அரபி மொழியில் இறைவனை மட்டும் குறிக்கும் சொல். 

நாம் மேலே இறைவனுக்கு சொன்ன அனைத்து பண்புகளுக்கும் சொந்தக்காரன் தான் அல்லாஹ். அவனை இது வரை யாரும் பார்க்காதலால் அவனுக்கு பள்ளிவாசலில் சிலை, உருவம் கிடையாது.

நாம் எப்படி தண்ணிரை தமிழில் தண்ணிர் என்றும்ஆங்கிலத்தில் water என்றும்ஹிந்தியில் பாணி என்றும்அழைக்கிறமோ அதுபோல் தான் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அரபி மொழியில் அழைக்கிறார்கள்.

தமிழில் இறைவனை இறைவன் என்றும்கடவுள் என்றும்ஆங்கிலத்தில் GOD, LORD என்றும்ஹிந்தியில் பகவான் என்றும்அரபி மொழியில் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள்.

ஆதலால் முஸ்லிம்கள் மட்டுமே அந்த சரியான உண்மையான ஒரே இறைவனை வணங்கி வழிபட்டு வருகிறார்கள் 

(GOD IS ONE, PRACTICALLY THEORETICALLY HENCE PROVED)

அந்த படைத்த ஒரு இறைவனை ஏற்று கொள்ளாமல் நம் இஷ்டபடி நம் தாய் தந்தையரின் முன்னோர்களின் முதாதையர்களின் இறைவனை கடவுளை கண்மூடித்தனமாக வணங்கினால் நமக்கு நிரந்தர நரகம் என்பதை நினைவில் கொள்ளுவோம். இறைவன் தனக்கு இணைவைப்பதை அதாவது தனக்கு பதிலாக வேறு ஒரு போலியான பொய்யான இறைவன் வணங்கப்படுவதை விரும்புவதில்லை மற்றும் மன்னிப்பதில்லை. ஏன் என்றால், 

நமது மனைவி மற்றவரை கணவனாக நினைப்பதை நம்மால் சகிக்க முடிகிறதாஏற்று கொள்ள முடிகிறதாநமது மனைவியை நமது கைகள் செய்யவில்லைபடைக்கவில்லைஅதற்கே நம்மால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் நம்மை படைத்த இறைவன் தனக்கு இணைவைப்பதை எப்படி பொறுத்து கொள்வான்இறைவன் தனக்கு இணைவைப்பதை அதாவது தனக்கு பதிலாக வேறு ஒரு போலியான பொய்யான இறைவன் வணங்கப்படுவதை அவனாலும் சகிக்க முடியாதுபொறுத்து கொள்ள முடியாது.

இந்த பூமி இறைவனுக்கு சொந்த மானது
இந்த வானம் இறைவனுக்கு சொந்த மானது
இந்த சூரியன் இறைவனுக்கு சொந்த மானது
நாம் குடிக்கும் இந்த தண்ணீர் இறைவனுக்கு சொந்த மானது
நாம் உண்ணும் இந்த உணவு இறைவனுக்கு சொந்த மானது
நாம் சுவாசிக்கும் இந்த காற்று இறைவனுக்கு சொந்த மானது
நமது உயிர்உடம்புகண்காதுஇதயமமூளைமற்றும் அனைத்தும் இறைவனுக்கு சொந்த மானது

நமது பிறப்பையும் இறப்பையும் நிறத்தையும் பெற்றோரையும் முகத்தையும் தாய் மொழியையும் பிறக்கும் இடத்தையும் அனைத்தையும் முடிவு செய்பவன் இறைவன்.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே,  நாம் யாரை வணங்க வேண்டும்நமது வணக்கத்திற்கு தகுதியான இறைவன் யார்

இறைவனை வணங்குவதா அல்லது இறைவனின் படைப்புகளை வணங்குவதா

உலகத்தின் உண்மையான இறைவனை வணங்குவதா அல்லது பொய்யான இறைவனை வணங்குவதா ?

இது சாதாரண விஷயம் இல்லை, விளையாட்டு விஷயம் இல்லை, மிகவும் முக்கியமான விஷயம் . சொர்க்கமா அல்லது நரகமா என்ற வாழ்க்கை பிரச்சனை.
இறைவனை வணங்கிபெரும் பாவம் செய்யாமல் நல்ல செயல் செய்து நல்லவனாக வாழ்ந்தால் சுவனம் சொர்க்கம் கிடைக்கும். அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை.

இறைவன் அல்லாத மற்றவற்றை வணங்கி இறைவனுக்கு இணை வைத்தால் அவனுக்கு நரகம் தான்அவனுக்கு மன்னிப்பே கிடையாது. அவன் எவ்வளவு நல்லவனகாக இருந்தாலும் சரியே. அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை.

நமக்கு மரணம் வரும்ன் நம்மை படைத்த இறைவனை ஏற்று கொண்டு சுவனம் செல்வோம். நமக்கு எந்த நிமிடமும் மரணம் வரலாம்.

என்னை படைத்த இறைவனை ஏற்று கொள்ளாமல் இருக்க அவனை வணங்காமல் இருக்க எனக்கு என்ன நேர்ந்தது?

நண்பர்களே! எந்த ஒரு சின்ன விஷயமாக இருக்கட்டும் அல்லது பெரிய விஷயமாக இருக்கட்டும், அனைத்திலும் இஸ்லாம் உங்களுக்கு நேரான தெளிவான ஒளிமயமான வழியை காண்பிக்கிறது. 

அது இறைவன் யார் என்ற விஷயமாக இருக்கட்டும், 
நான் ஏன் படைக்கப்பட்டேன் 
என் வாழ்வின் நோக்கம் என்ன என்பதாக இருக்கட்டும், நான் இறந்த பிறகு என்னாகுவேன், சொர்க்கமா நரகமா என்ற மறுமை மற்றும் தீர்ப்பு நாள் விஷயமாக இருக்கட்டும், இன்றைய பிரச்சனைகளுக்கு நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வாக இருக்கட்டும், 
இறைவனின் வேதமாக இருக்கட்டும், 
உலகம் எப்போது அழியும் என்பதாக இருக்கட்டும், 

அனைத்திலும் இஸ்லாம் தான் உண்மையாக தெளிவாக துல்லியமாக மிக சரியாக வழிகாட்டுகிறது

மற்ற மதங்கள் உணமையான ஒரே இறைவனை வணங்குவதை விட்டும் வெகு தூரம் விலகி சென்று மக்களை வழி கெடுக்கின்றன. 

இறைவன் ஒருவன்  தான் உலகத்துக்கே, 
உலக மக்கள் அனைவர்க்கும் ஒரே இறைவன். 

(GOD IS ONE)
-- 
with peace,
Shajahan Mohamed Umer
"Help People"

மறுமை நம்பிக்கை தேவையா?

மறுமை நம்பிக்கை தேவையாதீர்ப்பு நாளின் அவசியம் என்ன? (Day of Judgment, After Death Life, Paradise or Hell, Eternal life)

மறுமையைப் பற்றி இஸ்லாமும் மற்ற மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 

நாளை இறந்த பிறகு மறுமையில் நாம் யாரும் இறைவனிடம் இருந்து தப்ப முடியாது

எந்த மதத்தின் மறுமைப் கொள்கை உண்மை என்றும் 
எந்த மதத்தின் மறுமைப் கொள்கையை தேர்ந்தெடுத்தால் பாவம் செய்ய பயப்படுவோம் அல்லது பாவங்கள் குறையும் என்பதை பார்ப்போம்.

கிருஸ்துவ மதம், (In CHRISTIANITY)

நமது ஆண்டவராகிய இயேசு கிருஸ்து உலக மக்களின் பாவத்துக்காக சிலுவையில் இரத்தத்தை சிந்தி மரணித்து விட்டார். இயேசு கிருஸ்துவை விசுவாசம் கொண்டால் நமக்கு சொர்க்கம். எந்த பாவத்தை வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் நான் செய்யலாம். ஏன் என்றால் இயேசு கிருஸ்து எனது பாவத்துக்காக சிலுவையில் இரத்தத்தை சிந்தி மரணித்து விட்டார். இயேசு கிருஸ்துவை விசுவாசம் கொண்டதால் எனக்கும் மற்ற பாவம் செய்யும் கிருஸ்துவர்களுக்கும் சொர்க்கம் தான். ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இந்து மதம், (In HINDUISM)

நாம் பிறந்து இறந்த பிறகு ஏழு ஜென்மமாக பிறப்போம் (KARMA - RE-BIRTH), பிறகு சொர்க்கம் அல்லது நரகம் போய் சேர்வோம். இறைவனிடம் கேள்வி கணக்கு எல்லாம் கிடையாது. நாம் வாழும் இந்த ஜென்மத்தில் நாம் செய்கின்ற பாவத்தை பொறுத்து,அடுத்து ஜென்மத்தில் நாம் கீழ் ஜாதிக்காரனாக அல்லது விலங்குகளாக அல்லது பறவையாக அல்லது பூச்சியாக அல்லது புழுவாக பிறப்போம். 

பிரச்சனை என்னவென்றால் நாம் இப்போது எத்தனையாவது ஜென்மத்தில் இருக்கிறோம் என்று கூட நம் யார்க்கும் தெரியாது. 
நாம் போன ஜென்மத்தில் என்னவாக பிறந்தோம் என்றும் கூட நம் யார்க்கும் தெரியாது. 
நாம் போன ஜென்மத்தில் என்ன என்ன பாவங்கள் நன்மைகள் செய்தோம் என்றும் கூட நம் யார்க்கும் தெரியாது. 
அதனால் நாம் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். 
அடுத்த ஜென்மத்தில் நான் என்னவாக பிறந்தால் எனகென்ன. ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

புத்த மதம், (In BUDDHISM)

புத்தர்கடவுள் பற்றியோ மறுமை பற்றியோ சொர்க்கம் நரகம் பற்றியோ எதையும் பேசவில்லை. புத்தர் இந்தியாவில் பிறந்ததால்அவர் இறந்த பிறகு அவரை பின்பற்றியவர்கள் இந்து மதத்தில் இருந்து பல விசயங்களை (கர்மா) அப்படியே பின்பற்றி வந்தார்கள். புத்தரை மட்டும் கடவுளாக ஆக்கி கொண்டார்கள். 

தி.ககம்யூனிஸ்ட் மற்றும் கடவுள் இல்லை மதம்
(DARWINISM, ATHEIST, NO GOD & COMMUNIST)

கண்டதே காட்சி கொண்டதே கோலம்நாம் செத்த பிறகு மண்ணோடு மண்ணாகி  போய்விடுவோம். இந்த ஒரு உலக வாழ்க்கை மட்டும் தான் வாழ்க்கை. அதனால் நாம் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். என்னை கேள்வி கேட்க யாரும் கிடையாது. நான் தண்ணி அடிப்பேன்விபச்சாரம் செய்வேன், லஞ்சம் வாங்குவேன்வரதட்சனை வாங்குவேன்,எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். எவன் என்னை கேள்வி கேட்க முடியும். எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். ஆதலால் பாவத்தை விட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இஸ்லாம் ( In ISLAM )

நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை ஒரே ஒரு ஜென்மம் தான். நம்மை படைத்த இறைவன் நம்மை எந்நேரமும் கண்காணித்து கொண்டு இருக்கிறான். நமது இறப்பை இரகசியமாக வைத்துஉள்ளான். நாம் வாழும் இந்த உலகத்தில் இறைவனை சந்திக்க எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். நாம் இறந்த பிறகுநாளை மறுமையில் இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான்பிறகு நாம் செய்த செயலைப் பற்றி இறைவன் நம்மை கேள்வி கணக்கு கேட்பான். நாம் இறைவனுக்கு இணை வைக்காமல் அதாவது உண்மையான யாரும் பர்ர்க்காத இறைவனை வணங்கி நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கம். நாம் கெட்டவனாக வாழ்ந்தால் நரகம். அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை. நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்ஆனால் நம்மை படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது.

நான் என் இஷ்டத்துக்கு வாழ முடியாதுபணத்திற்க்காக நான் எதையும் செய்ய முடியாது. என்னை படைத்த இறைவன் என்னை பார்த்து கொண்டு இருக்கிறான். அவனிடம் நான் இறந்த பிறகு நான் செய்த சிறிய பெரிய அனைத்து செயல்களுக்கும் பாவங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். 

அவரவர் செய்த பாவத்துக்கு அவரவர் தான் பதில் சொல்லியாக வேண்டும். நான் செய்த பாவத்துக்கு என் தந்தையோ என் நண்பனோ என் சகோதரனோ பதில் சொல்ல முடியாது. அவர்கள் செய்த பாவத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. ஆதம் ஏவாள் செய்த பாவத்துக்கு அவர்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும்.

எனதருமை நண்பர்களே சகோதர்களே பங்காளிகளே! (FRIENDS)

நாம் எந்த மதத்தை தேர்ந்தெடுத்தால் பாவம் செய்ய பயப்படுவோம் என்பதை சிந்தித்தால் இஸ்லாம் தான் உங்கள் பதில் ஆக இருக்கும். 

எந்த மத வாழ்க்கை முறை சிறந்ததாக உள்ளது என்பதை சிந்தித்தால் இஸ்லாம் தான் உங்கள் பதில் ஆக இருக்கும். 

ஏன் இஸ்லாம் சிறந்ததாக உள்ளது என்றால் அது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல். மற்ற மதங்கள் எல்லாம் இறைவன் மார்க்கத்தில் இருந்து பிரிந்து மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள். அவை மனிதனுக்கு ஒருபோதும் நேர்வழியை அமைதியை தராது. நரகத்திற்கு தான் வழிகாட்டும். நரகத்திற்கு தான் இட்டு செல்லும்.

மறுமை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரே ஒரு உதாரணத்தின் மூலன் எளிமையாக புரிய வைக்கலாம் என்று நினைக்கிறன்.

உங்களை ஒருவன் பணத்தை வாங்கிவிட்டு திரும்ப தராமல் ஓடி போய் விட்டான். அவனை உங்களால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லைபோலிசும் கண்டுபிடிக்க முடியவில்லை,நீங்களும் இறந்துவிட்டீர்கள். அவன் எங்கு மாட்டுவான் என்று உங்களுக்கு தெரியுமா?

கிருஸ்துவ மதப்படிஅந்த நம்பிக்கை துரோகி இயேசுவை நம்பிக்கை கொண்டால் அவனுக்கு சொர்க்கம்,

இந்து அல்லது புத்த மதப்படி அந்த நம்பிக்கை துரோகி அடுத்த ஜென்மத்தில் ஏதாவதாக பிறப்பான்,

இஸ்லாம் மதப்படி அந்த நம்பிக்கை துரோகிநாளை மறுமையில் இறைவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவான். அந்த பாதிக்கப்பட்ட மனிதன் இறைவனிடம் இவனைப்பற்றி புகார் கூறுவான். அப்போது இறைவன் நீதி செலுத்துவான். அந்த நம்பிக்கை துரோகியிடம் நன்மை அதிகமாக இருந்தால் அவனின் நன்மையை எடுத்து இறைவன் இந்த பாதிக்கப்பட்டவனுக்கு கொடுப்பான்இந்த பாதிக்கப்பட்டவனிடம் தீமை அதிகமாக இருந்தால் இவனின் தீமையை எடுத்து இறைவன் அந்த நம்பிக்கை துரோகியிடம் கொடுப்பான்.

இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் மனிதன் பாவம் செய்தால்இறைவன் நாடினால் மன்னிப்பான் இறைவன் நாடினால் தண்டிப்பான்.
மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் மனிதன் பாவம் செய்தால்அந்த பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரைக்கும் இறைவன் மன்னிக்க மாட்டான். 

இந்த உலகத்தில் யாரை வேண்டுமானால் ஒருவனை நாம் ஈசியாக ஏமாற்றி விடலாம்ஆனால் நாம் மாட்டிக்கொள்வது இறைவனிடத்தில் மறுமையில் தான்.

இப்போது சொல்லுங்கள் நண்பரேஎந்த கொள்கையின் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்தால் நாம் பாவங்கள் செய்யாமல் இருப்போம்பாவங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது

இஸ்லாம் தான் நண்பரே உங்கள் முடிவாக பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். இதைவிட சிறந்த கொள்கை வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பரே.

மற்றொரு உதாரணத்தின் மூலம் உங்களுக்கு புரிய வைக்கிறேன்.

நல்லவன் கஷ்டப்படுகிறான் கெட்டவன் ஜாலியாக இருக்கிறான். ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் பணக்காரர்கள் ஜாலியாக இருக்கிறார்கள்,
மது அருந்துபவன் சிகரெட் குடிப்பவன் நல்லாதான் இருக்கான்,ஆனால் டீகாப்பிபால் குடிப்பவனுக்கு ஏன் நோய் வருகிறதுஏன் அவனை விட இவன் சீக்கிரம் செத்து போகிறான். இங்கு தான் மறுமை தேவைப்படுகிறது. நல்லவனுக்கு இறைவன் நாளை மறுமையில் சுவனத்தை வைத்துஉள்ளான். கெட்டவனுக்கு நரகத்தை வைத்து உள்ளான்.

ஒருவன் ஒரு கொலை செய்கிறான் மற்றொருவன் பத்து அல்லது நூறு கொலை செய்கிறான்அவனுக்கு இந்த உலகத்தில் அதிக பட்சமாக என்ன தண்டனையை கொடுக்க முடியும்அதுவும் சாட்சி இல்லை என்றால் அவனை தண்டிக்க முடியாது. அவன் நீதிபதிக்கு வக்கீலுக்கு லஞ்சம் கொடுத்து ஏமாற்றினால் அவனை எங்கு தண்டிக்க முடியும்அரசாங்கமே தவறு செய்தால் யார் தண்டிப்பதுஅவர்களை யார் தண்டிக்க முடியும்இங்கு தான் மறுமை தேவைப்படுகிறது.

அதைப்போல் நாம் இந்த உலகத்தில் ஒரு பாதிக்கபட்ட மனிதனுக்கு உதவி செய்கிறோம்ஒரு பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி செய்கிறோம்ஒரு பாதிக்கபட்ட குடும்பத்துக்கு உதவி செய்கிறோம்அதனால் நமக்கு இந்த உலகத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. நமக்கு கூலியை இறைவன் மறுமையில் தான் பரிபூர்ணமாக தருவான்அது தான் சொர்க்கம்.

நான் ஏன் பட்டினி கிடந்து ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்,எத்தனையோ அழகான பெண்கள் உள்ள போது நான் ஏன் ஒரு பாதிக்கபட்ட பெண்னை திருமணம் முடிக்க வேண்டும். இறைவன் நாளை மறுமையில் என்னை மன்னித்து எனக்கு சொர்க்கம் தருவான் என்பதற்காக.

ஒரு முஸ்லிமுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் அல்லது ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு சிப் கூட மது அருந்த வைக்க முடியாதுஅவனுக்கு இந்த உறுதியை கொடுத்தது எது தெரியுமாமறுமையில் இறைவன் என்னை கேள்வி கேட்ப்பான்,அவன் கேள்வி கேட்கும் போது நான் என்ன பதில் சொல்வது,நரத்துக்கு பயந்து தான்அவன் விலை போகவில்லைஇது போல்தான் அனைத்திலும். தவறு செய்யும் முஸ்லிம்களை இறைவன் மறுமையில் தண்டிப்பான்.

உதாரணமாக சவ்த் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹாஷிம் அம்லாதன் டி ஷர்ட்டில் மதுவின் விளம்பர படத்தை போட அனுமதிக்கவில்லைஇதனால் பலலட்சம் ரூபாய் அவருக்கு வருமானம் இழப்புஅவரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மதுவின் விளம்பர டி ஷர்ட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள். ஒரு முஸ்லிம் பணத்துக்காக வாழ முடியாது,பணத்துக்காக எதையும் செய்ய முடியாது,

மேலும் லண்டனில் நடந்த போன ஒலிம்பிக்கில் ஒரு முஸ்லிம் பதக்கம் வாங்கும் போதுஇங்கிலாந்தின் இளவரிசி பதக்கம் அணிவிக்கும் முன்கை கொடுக்க முயற்சி செய்யும் போதுஅந்த வீரர் கை கொடுக்க மறுத்துவிட்டார்அதை உலகமே டிவியில் பார்த்ததுஇஸ்லாம் அந்நிய பெண்ணை தொடக்கூடாதுஅன்னிய பெண்ணோடு கை குலுக்கக்கூடாது என்று கூறியதால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது இஸ்லாம்.

இந்த உண்மையான நம்பிக்கை தான் இஸ்லாம்இந்த இறைவனின் மார்க்கம் தான் இன்று நம் ஒவ்வொரு வீட்டிலும் (ENTIRE WORLD) மிக அவசரமாக தேவைப்படுகிறது. இறைவனின் மார்க்கத்தை விட்டுவிட்டு வேறு எந்த மதத்தை எந்த மார்க்கத்தை தேடுகிறோம்நண்பர்களே?

மறுமை எப்படி சாத்தியம்இறைவனால் மீண்டும் நம்மை உயிர்பிக்க முடியுமா ?

சிலருக்கு இப்படியும் சந்தேகம் இருக்கலாம்நம்மை எரித்த பிறகோ அல்லது நாம் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு மீண்டும் நாம் எப்படி உயிர்பிக்க முடியும்?இது எப்படி இறைவனுக்கு சாத்தியம் என்று நம்மில் பல பேர் சிந்தித்து பார்த்து இருப்போம். நமது முதல் பிறப்பை சிந்தித்தாலே இதற்கு பதில் கிடைத்து விடும்.

நாம் நம் தாயின் கருவறையில் திடிர் என்று எப்படி கருவானோம்,நமக்கு இந்த உடலை தலை கை காலை செய்தது யார்உயிரை கொடுத்தது யார்நாம் தாயின் கருவறைக்கு வருமுன் எங்கு இருந்தோம்எப்படி இருந்தோம்என்பது நமக்கு தெரியுமா?திடிரென்று ஒரு துளி விந்திலிருந்து நம்மை படைத்தது யார்

எதுவும் முதலில் படைப்பது தான் கடினம்மீண்டும் படைப்பது எளிது. நமது உடலுக்கு தான் சாவு தவிர நமது உயிர்க்கு சாவு இல்லை என்பதை புரிந்து கொண்டாலே போதும். இறைவனால் முடியாதது எதுவும் இல்லைஇறைவனால் எதுவும் செய்ய முடியும் என்பதையும் புரிந்து கொண்டாலே போதும். நம்மை முதலில் படைத்த இறைவனுக்கு நம்மை மீண்டும் படைக்கவா முடியாது. மனிதனை படைப்பதை விட இந்த எண்ண முடியாத பால் வெளியை, வானம் பூமியை படைப்பது மிக கடினம்,வானத்தை தூணின்று படைப்பது மிக மிக கடினம்அவனுடைய படைப்புகளை இதுவரை நம்மால் எண்ணி முடிக்கவே முடியவில்லைஇன்னும் கண்டு பிடித்து கொண்டே இருக்கிறோம். அப்படிப்பட்ட இறைவனால் நம்மை மீண்டும் படைக்காவா முடியாது நண்பர்களே!

நீயா நானா ? Fifty Fifty Chance for me and you (50%-50%)

இன்னும் இஸ்லாத்தை ஏற்று கொள்ள தயக்கமாஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். இப்போது நம்மில் யார் சொல்வது உண்மை என்று உங்களுக்கு தெரியும். 

இருந்தாலும் ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் இருந்தால் (50% Chance for you) நாம் இறந்த பிறகு இன்னொரு ஜென்மத்தில் பிறப்போம் அல்லது மண்ணோடு மண்ணாகி விடுவோம்,அப்போது நாம் இருவரும் தப்பித்து விடுவோம். நாம் இருவரும் அடுத்த ஜென்மத்தில் எதுவாகவோ பிறப்போம் அல்லது மண்ணோடு மண்ணாகி போய்விடுவோம். 

ஒரு வேளை நான் சொல்வது உண்மையாக இருந்தால் (50%Chance for me) நீங்கள் மாட்டி கொள்வீர்கள். நான் தப்பித்து கொள்வேன். நாம் வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது. அங்கே இறைவன் முன் கதறி அழுதாலும் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது.  நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை இந்த ஒரே ஒரு வாழ்க்கை தான். நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பணம் தான் வாழ்க்கை அல்ல குணம் தான் வாழ்க்கை என்று இஸ்லாம் போதிக்கிறது. பணத்துக்காக எதையும் செய்யக்கூடாது மற்றும் நமது வாழ்க்கையின் நோக்கம் ஒழுக்கமும் நல்ல குணமும் தான் என்று இஸ்லாம் போதிக்கிறது. 

இறைவன் நம்மை எந்நேரமும் பார்த்து கொண்டு இருக்கிறான்.

இன்று மனித குலத்துக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். இந்த மண்ணுகேற்ற மார்க்கம் இஸ்லாம் தான். மனிதன் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் அனைவரும் பின்பற்றக்கூடியதாகவும் செயல்முறையிலும் செயல்படுத்தவும் எளிமையாகவும் உள்ளது. ஏன் என்றால் இஸ்லாம் இறைவனால் மனித குலத்துக்கு அருளப்பட்ட மார்க்கம். இயற்கையானது. இஸ்லாம் மனிதனுக்கு நல்லதையே போதிக்கிறது தீயதை விட்டும் மனிதனை தடுக்கிறது.

மற்ற மதங்கள் அனைத்தும் மனிதனை நேரான வழியில் இருந்து தடுக்கிறது. உண்மையான யாரும் பார்க்காத ஒரே இறைவனை வணங்குவதில் இருந்து மனிதனை தடுக்கிறது. தீயது செய்தால் உனக்கு கடுமையான தண்டனை மறுமையில் நரகத்தில் கிடைக்கும் என்று மனிதனுக்கு போதிக்கவும் வில்லை. அவனை தீயதை விட்டும் தடுக்கவும் வில்லை.

நண்பர்களே! காலம் தாழ்த்தி யோசிக்காமல் உடனே இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை தழுவுங்கள். நீங்கள் ஒருவேளை காலம் தாழ்த்தினால்அதற்குள் மரணம் வந்துவிட்டால் நாளை மறுமையில் கதறி அழுது ஒரு பிரயோஜனமும் இல்லைநமக்கு கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை தான். நம்மை படைத்த இறைவனிடம் நேர்வழியை கேளுங்கள். உண்மையை ஏற்றுகொள்ளும் மனோ பக்குவத்தையும் மனோ தைரியத்தை தரும்படி வல்ல இறைவனிடம் கேளுங்கள். 

நம்மால் நரக நெருப்பை தாங்கி கொள்ளவே முடியாதுநரக தண்டனையை ஒப்பிடும்போது இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம் ஒன்றமில்லை. 

நாம் தான் நம் குடும்பத்தாரையும் நண்பர்களையும் உறவினர்களையும் நரகத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்,அவர்களுக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து சொல்ல வேண்டும்.   

-- 
with peace,
Shajahan Mohamed Umer